நீதிபதிகள் சஸ்பெண்ட்: வக்கீல்கள் போர்க்கொடி
திருநெல்வேலி:காவல் நிலையத்தில் ஆய்வு செய்ததற்காக நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவரைசஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சமீபத்தில் நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி மற்றும் 4வது நீதித்துறை நடுவர் ஆகியோர் பாளையங்கோட்டைகாவல் நிலையத்திற்கு நள்ளிரவில் சென்று இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் பணியில் இல்லாதது குறித்துவிசாரித்தனர்.
நீதிபதிகளின் இந்த நடவடிக்கை நெல்லை காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி நெல்லை வந்து விசாரணை மேற்கொண்டார்.
அவர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், இரு நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட்செய்தது.
இதைக் கண்டித்து நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து மாவட்டவழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், போலீஸார் கொடுத்த தவறான தகவல்களின்அடிப்படையில இரு நீதிபதிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 11 பேர் கொண்டகுழுவை அமைத்து அறிக்கை தயாரித்து தலைமை நீதிபதி மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம்ஆகியவற்றுக்கு நாங்கள் அறிக்கை அனுப்பவுள்ளோம்.
இருவரும் மீண்டும் பணியில் நீடிக்கச் செய்ய வேண்டும். அதுவரை காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் குதித்துள்ளோம். எங்களது போராட்டத்திற்கு பிற வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஆதரவையும்கோரியுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications