கரூர் பாலம்-கருணாநிதி மீதான கேஸ் வாபஸ்
கரூர்:கரூர் அமராவதி பாலம் காட்டியதில் ஊழல் நடந்ததாக முதல்வர் கருணாநிதி, அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர்மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
கரூர் அமராவதி நதியின் குறுக்கே பாலம் கட்ட கடந்த 1997ம் ஆண்டு ஈசிசிஐ என்ற தனியார் நிறுவனத்திற்குஅப்போதைய திமுக அரசு அனுமதி வழங்கியது. கட்டுமானப் பணிகள் முடிந்து பாலம் கடந்த 2001ம் ஆண்டுபிப்ரவரி 11ம் தேதி பாலம் திறக்கப்பட்டது.
ரூ. 13 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் கடந்து செல்லும் வாகனங்களிடம் இருந்து சுங்க வரிவசூலிக்கப்பட்டது. இந் நிலையில் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பாலம்சேதமடைந்தது. இதையடுத்து பாலத்தை விரைவில் சீரமைத்து தருவதாக ஈசிசிஐ நிறுவனம் அறிவித்தது.
பாலத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததா?என்பது பற்றி விசாரிக்க ழு அமைக்கப்படும் என்றார். பின்னர் பாலத்தை அரசே ஏற்றது. இதனால் சுங்கவரி ரத்துசெய்யப்பட்டது.
இந் நிலையில் கரூர் அமராவதி பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் எப்ஐஆர் தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக முதல்வர்கருணாநிதியை சேர்த்திருந்தார் ஜெயலலிதா.
2வது குற்றவாளியாக அமைச்சர் கோசி.மணியும், 3வதாக உள்ளாட்சி துறை செயலாளராக இருந்த மாலதி, 4 வதுகுற்றவாளியாக முன்னாள் தலைமை செயலாளர் நம்பியார், 5வது குற்றவாளியாக ஈசிசிஐ நிறுவன நிர்வாகஇயக்குனர் அப்துல் ரகுமான் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மேலும் ஈசிசிஐ நிறுவனத்தின் அலுவலகம், விருந்தினர் மாளிகை ஆகியவற்றிலும் சிபிசிஐடி போலீசார் சோதனைநடத்தினர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி துணைகண்காணிப்பாளர் ராம.அம்பிகாவதி நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்கே உண்மைக்கு புறம்பாக தொடரப்பட்ட வழக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்துவழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications