அடம் பிடிக்கும் கர்நாடகா.. காவிரியில் நீர் திறக்கப்படாது! மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கறார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், நீர் திறக்கப்படாது என கர்நாடகா உறுதியாக கூறியிருக்கிறது.

மழைப்பொழிவு குறைவாக இருப்பதாகவும், பெங்களூர் நகரத்திற்கான குடிநீர் தேவை இருப்பதாகவும், இதன் காரணமாக நீர் திறக்கப்படாது என்றும் கர்நாடகா அறிவிப்பு.

காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான நீர் பங்கீட்டை கூட கொடுக்க மறுத்து கர்நாடக அரசு அடம் பிடித்து வருகிறது. இந்த ஆண்டு காவிரியில் போதிய நீர் திறக்கப்படாததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால், அணை திறக்கப்படவில்லை. அணை திறக்கப்படாததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Cauvery Water Management meeting Cauvery Delhi Karnataka

குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படாத நிலையில் சம்பா சாகுபடிக்காவது நீர் திறக்கப்படுமா? என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கு முன்னரும், வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறி கர்நாடக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்து வந்திருந்தது. இந்த சூழலில்தான் டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை தமிழக அதிகாரிகள் கேட்டிருந்தனர். அதேபோல இதில் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்ளும் கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. இதுவரை 52 முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடியுள்ள நிலையில் இன்று 53-வது முறையாக கூடியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+