எல்லை மீறிய டெல்லி போலீஸ்? மாணவர்கள் மீது தடியடி.. உயர் நீதிமன்றத்திற்கு போன வழக்கு! இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கடந்த திங்கள்கிழமை மாணவர்கள் போராட்டத்தின் போது டெல்லி போலீசார் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது.

நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை இந்த மாணவர் அமைப்பினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.

neet protest high court

வழக்கு

அப்போது போராட்டக்காரர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவின. இதற்கிடையே மாணவர்கள் மீது போலீசார் அதீத பலத்தை தேவையில்லாமல் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்றைய தினம் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக நேற்றைய தினம் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்த நீதிமன்றம், "இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம். மனு நாளை விசாரணைக்கு வரும்" என்று தெரிவித்தது.

போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி கட்சி சார்பில் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியதாகக் கூறி போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த நடவடிக்கையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 38 பேர் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 65 பேர் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பலருக்கு எலும்பு முறிவு, கண்ணீர் புகையால் ஏற்பட்ட பாதிப்புகள், தலை மற்றும் கண் பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வீடியோ

போராட்டத்தின் போது இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த போதிலும், போலீசாரின் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. போலீசார் தேவையே இல்லாமல் மாணவர்களுக்கு எதிராக அதீத பலத்தை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.

சோனம் வாங்சுக்

இதற்கிடையே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடரப் போவதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அறிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ள முடியாது என்றும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நீதி கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+