மேக் இன் இந்தியா திட்டத்தை எதிர்க்கும் டிரம்ப்! இந்தியா மீதான வரிக்கு பின்னால் இருக்கும் பிளான்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு 25% வரை இறக்குமதி வரியை விதிக்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க வர்த்த பிரதிநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது நம்முடைய 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அடியோடு எதிர்ப்பதாகவும் அமெரிக்கா வெளிப்படையாக கூறியிருக்கிறது.

இப்படி சொல்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? ஏன் இந்தியாவின் திட்டங்களை அமெரிக்கா எதிர்க்கிறது? விரிவாக பார்ப்போம்.

Make in India India US

இன்னொரு சீனாவாக மாறும் இந்தியா?

அமெரிக்காவை பொறுத்தவரை சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ராணுவ விஷயங்களிலும் சரி.. பொருளாதார விஷயத்திலும் சரி, சீனா எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் இந்தியா இன்னொரு சீனாவாக மாறிவிடுமோ என்கிற அச்சம் அமெரிக்காவுக்கு தொடர்ந்து இருந்துக்கொண்டே வந்திருக்கிறது. எனவேதான் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை காரணம் காட்டி, இந்தியா மீது 25% அளவுக்கு வரி விதிக்க முன் வந்திருக்கிறது.

உண்மையான பயம் இதுதான்

அமெரிக்காவை விட, இந்தியாவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ரொம்பவே கம்மி. இது இல்லாமல்.. இந்திய அரசு உற்பத்திக்கு நிதி சலுகைகளையும் வழங்குகிறது. இதன் காரணமாக குறைந்த விலையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பொருட்கள் சந்தைக்கு வரும்போது, அமெரிக்க பொருட்களை விட இயல்பாகவே விலை குறைவாக இருக்கின்றன. எனவே அமெரிக்க பொருட்களால் போட்டியிட முடியவில்லை. இதனால் அமெரிக்காவில் உற்பத்தி சரிந்து வேலை வாய்ப்புகள், முதலீடுகள் குறையும் அபாயம் இருக்கின்றன.

இந்தியாவின் திட்டங்களை எதிர்க்கும் அமெரிக்கா

இதெல்லாம் நடக்கும் என்பதற்கு கண் முன்னாடியே உதாரணம் இருக்கிறது. சீனாவை பாருங்கள். தனது உற்பத்தியை எக்கச்சக்கமாக அதிகரித்து அதை சந்தைக்கு தள்ளுகிறது. இப்படி வரும் பொருட்களின் விலையை பார்க்கும்போது.. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களின் விலை மிக அதிகம். எனவே, மக்கள் சீன பொருட்களைதான் வாங்குகின்றனர். இப்போது இந்தியாவும் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' போன்ற திட்டங்கள் மூலம் சீனாவின் பாதையில்தான் செல்வதாக அமெரிக்கா பயப்படுகிறது. ஒரு சீனாவையே தாங்க முடியல.. இதுல இன்னொரு சீனாவா? என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

காலியாகும் அமெரிக்க வணிகம்

இந்த விஷயத்தை பொறுத்தவரை அமெரிக்கா பயப்படும் 3வது பாயிண்ட், இந்தியா தனது உபரி மதிப்பை அதிகரிக்கும் என்பதுதான். தேவைக்குதான் பொருட்களை உற்பத்தி செய்வார்கள். ஆனால், தேவையை தாண்டி பொருட்களை உற்பத்தி செய்யும்போது.. அப்படி உருவாகும் பொருட்களின் மதிப்பு மிக குறைவாக இருக்கும். இதைத்தான் உபரி உற்பதி என்பார்கள். இப்படி உருவான பொருட்களை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால்.. உலக சந்தையில் அமெரிக்க பொருட்களின் விற்பனை சரிந்து, வணிக சந்தையில் அமெரிக்கா ஓரம் கட்டப்படும்.

இந்தியாவின் உற்பத்தியை பார்த்து பயப்படும் அமெரிக்கா

இன்னொரு விஷயம் என்னவெனில், சீனாவின் மறைமுகமான என்ட்ரியை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது என்பதுதான். சீன பொருட்கள் மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்திருக்கிறது. ஆனால், சீனாவிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி.. இந்தியாவில் இந்த பொருட்களை கொண்டு 'மேட் இன் இந்தியா' மூலம் கருவிகள் உற்பத்தி செய்ப்படுகின்றன. இந்த கருவிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது.. சீனாவுக்கு விதித்த பொருளாதார தடைகள் பயனற்றதாகிவிடுகின்றன. எனவேதான் இந்தியாவின் உற்பத்தி பற்றி அமெரிக்கா பயப்படுகிறது.

இதைவிட முக்கியமான விஷயம், முக்கிய துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி. எஃகு, மருந்துகள், சூரிய சக்தி மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் எந்த நாடு தற்சார்பை முழுமையாக எட்டுகிறதோ.. அது வளர்ந்த மற்ற நாடுகளுக்க கடும் போட்டியை உருவாக்கும். இந்த துறைகளில் இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறது. எனவேதான் அமெரிக்கா பயப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியா மீது 25% வரியை விதிக்க அமெரிக்கா ரெடியாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+