லண்டனில் இருந்து விஜய்க்கு வந்த புகார்.. தலைமைச் செயலக புகார் பெட்டி திடீர் இடமாற்றம்.. என்ன நடந்தது
சென்னை: முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் பொதுமக்கள் நேரில் வந்து அளிக்கும் புகார் மனுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இணையவழி மூலம் தங்களின் குறைகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் லண்டனில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஒரு புகார் பறந்து வந்துள்ளது.. அது என்ன தெரியுமா?
தமிழக தலைமை செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனுக்களை அளிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தவண்ணம் இருக்கிறார்கள்.. இதனால் அங்கு வரலாறு கூட்ட நெரிசல் நிலவி வருகிறது.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார்
முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பொதுமக்கள் நேரடியாக தலைமை செயலக வளாகத்திற்குள் சென்று, அதிகாரிகளிடம் மனுக்களை அளித்த முறையும், அங்குள்ள புகார் பெட்டியில் போடும் நடைமுறையும் இருந்தது. ஆனால் இப்போது முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால்தான், இந்த கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் புகார் பெட்டி இப்போது தலைமைச் செயலகத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் முதற்கட்டப் பரிசோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதிக்கப்படும் பகுதியில் இந்த பெட்டி வைக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகளை நேரில் சந்திப்பதற்குப் பதிலாகப் பெட்டியில் மட்டுமே மனுக்களைப் போடும் வகையில் வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
லண்டனில் இருந்து மெசேஜ்
இங்கு பெறப்படும் மனுக்கள் மீது தனிப்பிரிவு அதிகாரிகள் உடனடியாகச் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகின்றனர். நேரில் வர இயலாத பொதுமக்கள் வசதிக்காக cmhelpline.tnega.org என்ற வெப்சைட் மற்றும் வாட்ஸ்-அப் எண்கள் மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், லண்டனில் இருந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்த ஒரு லஞ்சப் புகார் தற்போது கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சீனித்தாய் என்பவருக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் மாத ஓய்வூதியத்தை வழங்குவதற்காகக் கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் (பி.இ.ஓ.) முத்துக்குமார் ரூ.40000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மாத ஓய்வூதியம் குறித்த புகார்
பணம் கொடுத்த பிறகும் மாத ஓய்வூதியம் தடையின்றி கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டதால், லண்டனில் என்ஜினியராக வேலை பார்க்கும் ஆசிரியை சீனித்தாயின் மகன் சதீஷ், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் எண் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரடியாகப் புகார் அனுப்பியுள்ளார்
அதில், அதில், என் தாய் சீனித்தாய் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கு தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்று பெற பெற, பி.இ.ஓ.,வுக்கு, 40,000 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த நிலையில் மாத ஓய்வூதியம் கிடைக்கவிடாமல் இழுத்தடிக்கின்றனர். ஓய்வூதியம் கிடைக்கவும், 40,000 ரூபாயை திரும்ப பெற்றுத் தரவும் எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்...
சென்னையில் பரபரப்பு
இந்த புகாரைத் தொடர்ந்து திருமங்கலம் தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) இச்சம்பவம் குறித்து நேரில் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
ஆனாலும் தன் மீதான லஞ்சக் குற்றச்சாட்டை வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமார் மறுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு, அதில் கொஞ்சமும் உண்மையும் இல்லை எனத் துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்திற்கு நேரில் வந்து மனு அளிக்கும் மக்களின் கூட்டத்திற்கு இடையே, லண்டனில் இருந்தும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வாட்ஸ்-அப் மூலம், புகார் பறந்த சம்பவம்தான், இன்றைய தினம் தமிழக அளவில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது....!!


Click it and Unblock the Notifications
