மதுரையிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:மதுரைக்கும், அனுராதபுரத்திற்கும் இடையே மின் வினியோக கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்தசாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத் துறை அமைச்சர் அனுராபிரியதர்ஷனா யாபா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதாபுரத்திற்கும், தென்னிந்தியாவின் முக்கிய நகரானமதுரைக்கும் இடையே மின் வினியோக கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கஅரசு முடிவு செய்துள்ளது.

இத் திட்டம் குறித்து பரிசீலிக்க மின்சாரத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம்இந்தியாவிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டத்தை செயல்படுத்த 430 மில்லியன் டாலர்செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உயர் மின் அழுத்த கம்பிகள் அமைப்பது உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நான்குஆண்டுகள் நிறைவடையும்.

இலங்கையில் தடையற்ற மின் வினியோகத்தை உறுதி செய்ய இந்தத் திட்டம் அவசியமாகிறது. திட்டம்தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கு உதவ அமெரிக்க சர்வதேச வளர்ச்சி ஏஜென்சி உதவ முன்வந்துள்ளது.தொழில்நுட்ப உதவிகளை இந்த அமைப்பு வழங்கும்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள நுரைச்சோலை பகுதியில் நிலக்கரியிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் ஒன்றும்,நுவரேலியா மாவட்டம் கொடிமலையில் நீர் மின் திட்டமும் நிறைவேற்றப்படவுள்ளது. இந்தத் திட்டங்கள்அமல்படுத்தப்பட்டாலும் கூட இலங்கையின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதால்மதுரையிலிருந்து மின் வினியோகத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயதீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் யாபா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+