நாடாளுமன்ற தாக்குதல்-திரும்பி வந்த பதக்கங்கள்
டெல்லி:நாடாளுமன்றத் தாக்குதலை எதிர்த்து தீவிரவாதிகளுடன் போராடி உயிர்த் தியாகம் செய்த 9 வீரர்களுக்கு மத்தியஅரசு வழங்கிய வீரப் பதக்கங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில், அவர்களது குடும்பத்தினர் திருப்பிஅளித்து விட்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இதையடுத்த பாதுகாப்புப் படை வீரர்கள்தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடினர். இதில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள், 2 மத்திய அரசு ஊழியர்கள், ஒருபத்திரிக்கை நிருபர் ஆகியோர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
நாடாளுமன்றத்தைக் காக்கப் போராடி உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்கள் 9 பேரின் தியாகத்தைப்பாராட்டி மத்திய அரசு அவர்களுக்கு வீரப் பதக்கங்களை வழங்கியது.
நேற்று நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில்நேற்று 9 வீரர்களின் குடும்பத்தினரும் வீரப்பதக்கங்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஊர்வலமாகசென்றனர்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனைவிதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சலுக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதைக் கண்டித்து குரல்எழுப்பிய அவர்கள் 9 வீரர்களுக்கும் வழங்கப்பட்ட வீரப் பதக்கங்களை திருப்பி அளிப்பதாக கூறி அவற்றைகுடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினர்.
பின்னர் 10 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றையும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்கள் ஒப்படைத்தனர்.அதில், அப்சலுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. அப்படி வழங்கப்பட்டால், இந்த நாட்டுக்காக தங்களதுஇன்னுயிரை இழந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்களது வீரம் மதிக்கப்படவில்லை என்றுதான்அர்த்தம். ஆகவே இந்த பதக்கங்களை திருப்பிக் கொடுக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், அப்சல் குருவுக்குத் தண்டனையைநிறைவேற்ற வேண்டும். இதை நாங்கள் பாஜகவினர் சொல்லி கோரவில்லை. எங்களை பாஜகதான் தூண்டிவிடுகிறது என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
யாருடைய தூண்டுதலின் பேரிலும் நாங்கள் செயல்படவில்லை. அப்சலுக்கு கருணை காட்டக் கூடாது என்றுதான்கோருகிறோம். அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசியல் குறுக்கீடு இருப்பதாக கருதுகிறோம்.எனவேதான் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களைத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தோம் என்றனர்.
தீவிரவாதிகளுக்குப் பலியான தலைமைக் காவலர் விஜேந்தர் சிங்கின் மனைவி ஜெயவதி கூறுகையில், இந்த வீரப்பதக்கங்களை அப்சலைத் தூக்கிலிடும் வரை கண்காட்சியில் வையுங்கள். அதன் பின்னர் இவற்றை நாங்கள்பெற்றுக் கொள்கிறோம் என்று ஆவேசமாக கூறினார்.
9 வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்சல் மனு:
இதற்கிடையே, தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அப்சல் உச்சநீதிமன்றத்தில்நிவாரண மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், வழக்கு விசாரணை முறைப்படி நடக்கவில்லை. நான் விரும்பிய வழக்கறிஞரை வைத்துக் கொள்ள எனக்குஅனுமதி தரப்படவில்லை. இது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமையைமீறும் செயல்.
எனவே எனக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமற்றது. ஆகையால் இந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.இந்த வழக்கு முடியும் வரை தண்டனயை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல இவ்வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட செளகத் உசேன் குருவும் நிவாரணமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications