இலங்கைக்கு உதவி இல்லை: ஏ.கே.அந்தோணி
டெல்லி:இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் எதையும் இந்தியா தரவில்லை என்றுமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
1971ம் ஆண்டு இதே நாளில், கிழக்கு வங்காளத்தில் பாகிஸ்தான் படையுடன் இந்தியாநடத்திய போரில், நமது நாடு அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் படைகள்இந்தியாவிடம் சரணடைந்தன. வங்கதேசம் பிறந்தது.
இந்த தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவஸ்) அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி டெல்லியில் உள்ள அமர்ஜவான் நினைவிடத்தில் அமைச்சர்ஏ.கே.அந்தோணி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து உயிர்த் தியாகம்செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் எல்லையில்தீவிரவாதிகள் ஊடுறுவல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் கவனக்குறைவாகஇல்லாமல் தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசுடன் ராணு ரீதியிலான ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.இந்தியாவில் இலங்கை வீரர்களுக்கு ராணுவ ரீதியிலான பயிற்சியோ, ஆயுதப்பயிற்சியோ அளிக்கப்படவில்லை. நிர்வாக பயிற்சிதான் அவர்களுக்குத் தரப்பட்டது.
இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் அளிக்கப்பட மாட்டாது. அதில் மத்தியஅரசு தெளிவாகவே உள்ளது என்றார் அந்தோணி.
சமீபத்தில் சண்டிகரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் இலங்கை விமானப்படையினருக்கு போர் விமானங்கள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சிகொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. உக்ரைன் நாட்டிடமிருந்து மிக் ரகபோர் விமானங்களை இலங்கை வாங்கவுள்ளது. அந்த விமானங்களைஇயக்குவதற்கான பயிற்சியே இது என்றும் கொழும்பு பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகின.
ஆனால் இந்தியாவில் இலங்கை படையினருக்கு எந்தவித ராணுவப் பயிற்சியும்அளிக்கப்படவில்லை, நிர்வாகப் பயிற்சியே அளிக்கப்பட்டது என்று பாதுகாப்புஅமைச்சர் அந்தோணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications