இலங்கைக்கு ஏன் வெடிபொருள்? சோனியா விளக்கம்
சென்னை:கடல் அகழ்வுப் பணிகளான மண் தோண்டுதல், பாறைகளை உடைத்தல் போன்றபணிகளுக்காகவே இலங்கைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கைக்கு வெடிமருந்துகள் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தியதுதொடர்பாக கடந்த 11ம் தேதி தாங்கள் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த உங்களதுகவலையை நான் முழுமையாக உணர்கிறேன்.
நாம் 9ம் தேதி சந்தித்தபோதும் இந்த விவகாரத்தைப் பற்றி நீங்கள் பேசினீர்கள். இந்தவெடிமருந்துப் பொருட்கள் கடல் அகழ்வுப் பணிகளான மண் தோண்டுதல்,பாறைகளை உடைத்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவதற்காக இலங்கை கடற்படைமூலமாக விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கானவை என்று கப்பல் ஏஜென்டுகூறுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சரிதானா என்பதை அறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எந்தச்சூழ்நிலையில் எந்த அதிகாரியால் இந்த வெடிமருந்துப் பொருட்கள்அனுப்பப்பட்டுள்ள்ளது என்று ஆழ்ந்து விசாரிக்கப்படும் என்று எனக்கு உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எந்தவித ஆயுதங்களோ, பொருட்களோ, அவை பொதுமக்கள் மீதுவிசேஷமாக தமிழ் மக்கள் மீது பயன்படுத்தக் கூடும் என்பதால், அவற்றைவழங்குவதில்லை என்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்று மத்திய அரசு எனக்குஉறுதி அளித்துள்ளது.
இலங்கைத் தமிழர்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள நிலையில்,இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உயிரையும் நல்வாழ்வையும் பாதிக்கக் கூடியஎவற்றையும் செய்யக் கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என்றுசோனியா குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவித் தமிழர் கொலைக்குக் கண்டனம்:
கருணாநிதிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள இன்னொரு கடிதத்தில், இலங்கையில்ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் உள்பட பெரும்பாலானதமிழர்களின் பல அப்பாவி உயிர்கள் பறி போய் விட்டது, மிகவும் துயரமான,கவலையும், வருத்தத்தையும் அளிக்கும் சம்பவமாகும்.
இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் எந்தவித நியாயமும் இல்லை என்று நாங்கள்உறுதியாக குறிப்பிட்டு வருகிறோம். அப்பாவி மக்கள் குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தில் பொருத்தமானஅத்தனை மட்டங்களுக்கும் இதை எடுத்துச் சென்று இலங்கையில் உள்ள தமிழ் மக்கள்கொல்லப்படுவது குறித்த கவலையை எடுத்துச் சொல்லி வருவதை தாங்கள்அறிவீர்கள்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பெறும் வகையில்பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணும் அவசர அவசியத்தையும்உயி>ழப்புகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று என்று கூறியுள்ளார்சோனியா.












Click it and Unblock the Notifications