பாக்.: திருமணத்தில் தீ விபத்து-20 பேர் பலி
முல்தான்:பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீவிபத்து மற்றும் கூட்டநெரிசலில் சிக்கி மணமகள் உள்பட 20 பேர் பலியானார்கள்.
மத்திய பாகிஸ்தானில் உள்ள டேரா காஸிகான் என்ற நகருக்கு அருகே நேற்று இரவுதிருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக துணியால் ஆனபெரிய பந்தல் போட்டிருந்தனர்.
இரவில் மின்கசிவு காரணமாக இந்த பந்தலில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்துதீ வேகமாக பந்தல் முழுவதும் பரவியது. அப்போது தீயுடன் எரிந்த பந்தல் கீழேவிழுந்ததில் அதற்குக் கீழ் அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் உள்படதிருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
தீயைப் பார்த்து அதிர்ந்து போன பலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். தீ விபத்துமற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மணப் பெண் உள்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஆனால் சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். 70பேர் படுகாயமடைந்தனர். மணமகன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications