யோபுவின் 3 மனைவிகளும் சிக்கினர்
சென்னை:போலி பிஷப் யோபு சரவணனின் 3 மனைவிகளும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். யோபுவின் மோசடி குறித்ததகவல்களை நாளை நீதிமன்றத்தில் அவர்கள் வாக்குமூலமாக அளிக்கவுள்ளனர்.
வீடு கட்டித் தரும் திட்டம் என்று கூறி பல கோடி பணத்தை மோசடி செய்ததாக யோபு சரவணன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸார், 3 நாட்களுக்கு முன்புயோபுவை வேலூர் அழைத்துச் சென்று அவரது வீடுகள், சர்ச்சுகளில் சோதனை நடத்தினர்.
பல லட்சம் மதிப்புள்ள அவரது சொத்துக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள சஞ்சய் காந்தி மன நல மருத்துவமனை,அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பின்னர் மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று மூளை வரைபட சோதனை,உண்மை கண்டறியும் சோதனை ஆகியவை நடத்தப்பட்டன. யோபுவிடம் மொத்தம் 100 கேள்விகள் கேட்டுபதில்கள் பெறப்பட்டன.
இந்த விசாரணையின்போது மோசடி செய்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார், யார் யாருக்கு பணம்கொடுத்தார் என்பது குறித்த பல முக்கிய தகவல்களை யோபு கக்கியுள்ளதாக தெரிகிறது. விசாரணையை முடித்துக்கொண்டு நேற்று இரவே யோபு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.
இன்றும் அவரிடம் போலீஸார் தொடர்ந்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இந்த நிலையில் யோபுவின் 3 மனைவிகளான சாந்தி, அமுதா, மெர்ஸி ஆகியோர் போலீஸ் பிடியில்சிக்கியுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையின்போது தங்களுக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் நாளை நீதிமன்றத்தில் வாக்குமூலமாகஅளிக்க 3 பேரும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
யோபுவின் மனைவிகள் சிக்கி விட்டதால் யோபுவின் மோசடி குறித்த முழுத் தகவல்களும் போலீஸாருக்குக்கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications