தெ. ஆப்பிரிக்காவை சுருட்டிய ஸ்ரீசந்த்
ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்பிரிக்காவுக்கான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை இந்தியவீரர்கள் 84 ரன்களில் சுருட்டி அபார திறமையை வெளிப்படுத்தினர். இளம் பந்துவீச்சாளர் ஸ்ரீசந்த் 5விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
![]() |
ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிநடந்து வருகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 249 ரன்களுக்கு இழந்தது.
டெண்டுல்கர் 44 ரன்களை எடுத்தார். டிராவிட் 32 ரன்களும், வி.வி.எஸ். லட்சுமண் 28 ரன்களும் எடுத்தனர்.ஆனால் அணியின் சரிவை சற்றே தடுத்து கெளவரமான ஸ்கோரை எட்ட உதவியவர் முன்னாள் கேப்டன்கங்குலிதான். அபாரமாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்கா. ஒரு நாள் போட்டியில் இந்தியாவைஅமுக்கித் தள்ளிய தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் அணல் பறக்கும்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறித் தவித்துப் போனது.
இந்திய பந்துவீச்சாளர்களின் வேகத்தை குறிப்பாக ஸ்ரீசந்த்தின் அபாரப் பந்துவீச்சுக்கு முன்னால் தென்னாப்பிரிக்கவீரர்கள் மருண்டு போய் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஸ்மித் 5 ரன்களிலும், கல்லிஸ் 12ரன்களிலும் ஸ்ரீசந்த் பந்தில் வீழ்ந்தனர். அம்லா ரன் ஏதும் எடுக்காமல் ஸ்ரீசந்த்திடம் வீழ்ந்தார்.
பெளச்சர், போலக் ஆகியோரையும் ஸ்ரீசந்த் வெளியேற்றினார். மறு முனையில் ஜாகிர் கான், கும்ப்ளே தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 25. 1 ஓவர்களிலேயே 84 ரன்களுக்கு சுருட்டி விட்டனர்.தென்னாப்பிரிக்க அணியிலேயே அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவர் இளம் வீரர் பிரின்ஸ்தான். அவர் 24 ரன்களைஎடுத்தார்.
இதையடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. வாசிம் ஜாபர் வழக்கம் போல சொற்பரன்களில் ஆட்டமிழந்தார். ஷேவாக் சற்றே ஆடி 33 ரன்களை சேர்த்து வெளியேறினார்.
டிராவிட் 1 ரன் மட்டுமே எடுத்தார். சச்சின் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்துஆட்டமிழந்த நிலையில் லட்சுமணும், கங்குலியும் சற்று நிலைத்து ஆடி அணியின் சரிவை தடுத்தனர். முதல்போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் கங்குலி பொறுப்புடன் ஆடினார். ஆனால் 25 ரன்களில் அவர்ஆட்டமிழந்தார்.
மறு முனையில் லட்சுமன் சிறப்பாக ஆடி 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருக்குத் துணையாக17 ரன்களுடன் டோணி களத்தில் இருந்தார்.
2வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களை எடுத்திருந்தது.தென்னாப்பிரிக்காவை விட தற்போது இந்திய 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய மூன்றாவது நாள்ஆட்டத்தில் மேலும் அதிக ரன்களை சேர்க்க இந்தியா முயலும்.
தற்போதைய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications