பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 45 லட்சம் உதவி
சென்னை:ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 45லட்சம் பரிசாக அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தோஹாவில் நடைபெற்ற 15வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணியில் இடம்பெற்றதமிழகத்தைச் சேர்ந்த வீரர்களில், செஸ் போட்டியில் சிறந்து விளங்கும் சசிகிரண், தங்கம் வென்றதைப் பாராட்டிதமிழக அரசின் சார்பில் ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும்.
தடகள விளையாட்டுப் போட்டியில் சிறப்பான பல சாதனைகள் படைத்தவரும், தமிழகத்தின் சார்பில் 1997ம்ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகள் குவித்தவருமான அஞ்சு பாபிஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பாராட்டி ரூ. 15 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
ஆண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சதீஷ் கெளசலுக்கு ரூ. 10 லட்சம் பரிசாகவழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தடகளப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் உள்ளிட்ட பரிசு பெற்றஅனைவருக்கும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி பரிசுவழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications