ஆஸி. காட்டுத் தீ: 1000 கங்காருக்கள் பலி
சிட்னி:ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி ஆயிரக்கணக்கான கங்காருக்கள் மற்றும் கோலா கரடிகள் பலியாகி விட்டன.
தென் கிழக்கு ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட 3 மாநிலங்களில் உள்ள வனப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தீயாக இருப்பதால் இதைகட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த தீவிபத்தில் சிக்கி ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருக்குள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன.கோலா வகை கரடிகளும் இறந்துள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலிய வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின்தலைவர் பேட் ஓ பிரையன் கூறுகையில், கடும் வெப்பம் மற்றும் தீயில் சிக்கி விலங்குகள் அதிக அளவில்பலியாகி வருகின்றன.
தீயில் சிக்கி இறந்ததை விட தீயின் வெப்பத்தில் கருகியவைதான் அதிகம் உள்ளன. கோலா வகை கரடிகளால்மரத்தில் ஏறித் தப்பி விட முடியும். ஆனால் தகிக்கும் வெப்பத்திலிருந்து அவற்றால் தப்ப முடியவில்லை.
ஆயிரக்கணக்கான பறவைகளும் கூட தீக்கிரையாகியுள்ளன. வேறு எங்கும் காண முடியாத சில அரிய வகைதவளைகள், பறவைகள் அதிக அளவில் இறந்துள்ளன என்றார் பிரையன்.
விக்டோரியா, டாஸ்மானியா நியூ செளத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் ஹெக்டேர்பரப்பளவிலான காட்டுப் பகுதியில் தற்போது தீ தீவிரமடைந்துள்ளது.
விக்டோரியாவில் 4000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிக் கொண்டுள்ளனர். இந்த தீவிபத்தில் 30வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இப்பகுதியில் அதிக அளவில் உள்ள யூகலிப்டஸ் மரங்களால்தான் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்குபெரிதாகியுள்ளது. யூகலிப்டஸ் மரங்களில் உள்ள எண்ணெய் தீயை கொளுந்து விட்டு எரிய செய்து விட்டது.
தற்போது ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம். கடும் வறட்சி காரணமாக காட்டில் ஈரப்பதம் இல்லாமல் போய்விட்டது. இதனால்தான் தீ அதிக அளவு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத்தீயில் சிக்கி 250 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications