பெண் மோகத்தால் நண்பனை கொன்றவன் கைது
சென்னை:பெண் மோகத்தால் தனது நண்பனை கொன்றவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாங்காடு அருகே ஆலப்பாக்கம் ஏரி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (22) செல்போன் கடை நடத்திவருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த சிவா (21), பெரும்பூரைச் சேர்ந்த சுமதி (19) இருவரும்வேலை செய்து வந்தனர்.
![]() |
சுமதிக்கும், சிவாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவாவை சுமதிவலியுறுத்தியுள்ளார். ஆனால் சிவா மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்து காணபட்ட சுமதியிடம்பாலகிருஷ்ணன் அறுதலாக பேசி வந்துள்ளார்.
இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், சுமதியைதிருமணம் செய்து கொள்ள பாலகிருஷ்ணன் தயாராக இல்லை. ஆசையை தீர்த்துக் கொள்ள மட்டும் அவரைபயன்படுத்தி வந்துள்ளார்.
இந் நிலையில் தனது நண்பனான சரவணகுமாரை (22) தனது செல்போன் கடையில் வேலைக்கு சேர்த்தார்பாலிகிருஷ்ணன். அவருக்கும் சுமதிக்கும் கடந்த மாதம் 8ம் தேதி மாங்காடு கோயிலில் வைத்து பாலகிருஷ்ணனேதிருமணமும் செய்து வைத்தார். மேலும் மாங்காட்டில் ஒரு வீட்டையும் அவர்களுக்கு வாடகைக்குப் பிடித்துகொடுத்தார் பாலகிருஷ்ணன்.
பாலகிருஷ்ணனும் இவர்கள் வீட்டு பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். சில நாட்கள்கழித்து சுமதியை பாலகிருஷ்ணன் மிரட்டத் தொடங்கினான். என்னுடன் தொடர்ந்து உல்லாசமாக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் உன் கணவனிடம் எல்லா உண்மையையும் கூறிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
பாலகிருஷ்ணனின் மிரட்டலுக்கு பயந்த சுமதி அவனுடன் உல்லாசமாக இருக்க சம்மதித்துள்ளார். சரவணகுமார்வேலைக்கு சென்றவுடன் சுமதியோடு பாலகிருஷ்ணன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி பாலகிருஷ்ணன், சுமதியை கையும் களவுமாக பிடித்துவிட்டார் சரவணகுமார்.
இதனால் சரவணகுமாருக்கும், சுமதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்சனை வெளியே தெரிந்தால்அவமானமாகிவிடும் என்று நினைத்த பாலகிருஷ்ணன், சரவணகுமாரிடம் சமசர பேச்சு நடத்தினான்.
அப்போது வெள்ளவேடு பகுதியில் தனக்கு சொந்தமான ஒரு இடத்தை சரவணகுமார் பெயருக்கு எழுதிவைப்பதாக கூறியுள்ளான். இந் நிலையில் அந்த இடத்தை பார்ப்பதற்காக சுமதி, பாலகிருஷ்ணன், சரவணகுமார்ஆகியோர் வெள்ளவேடு சென்றனர்.
அங்கும் கூட சரவணகுமாருக்கு மது ஊற்றி கொடுத்து விட்டு அருகில் இருந்து ஒரு தோப்பில் பாலகிருஷ்ணனும்,சுமதியும் உல்லாசமாக இருந்துள்னர். பின்னர் போதை தெளிந்த சரவணகுமார் அவர்கள் இருவரையும் தேடிதோப்பு பக்கம் சென்றபோது அங்கு வைத்து பாலகிருஷ்ணனுக்கும், சரவணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சரவணகுமார் தலை மீது பாலகிருஷ்ணன் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். அதில் சரவணகுமார் மயங்கிவிழவே பின்னர் பாலகிருஷ்ணன் அவரை கழுத்தை நெரித்து கொன்றான்.
இதை தோட்டத்தின் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து விட்டனர். இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications