புது புது பிரச்சனை கிளப்பும் கேரளம்-துரைமுருகன்
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக புதுப் புதுப் பிரச்சினைகளைகேரள அரசு கிளப்புகிறது. தனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்துவருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்தியநீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில், தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், கேரள நீர்ப்பாசனத்துறைஅமைச்சர் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எந்த உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில்கலந்து கொண்டு விட்டு துரைமுருகன் இன்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமார் 90 நிமிடங்கள்பேச்சுவார்த்தை நடந்தது. சுமூகமாகவே இருந்தது. சட்டம் மற்றும் தொழில்நுட்பவிஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை விவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துரைப்பேன். அதன்பின்னர் மீண்டும் கேரளாவுடன் பேச்சு நடத்துவதா அல்லது உச்சநீதிமன்றத்தைஅணுகுவதா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததாற்கு, கேரள அரசு தனது நிலையில்பிடிவாதமாக இருப்பதும், புதுப் புதுப் பிரச்சினைகளை கிளப்பியதுமே முக்கியகாரணம் ஆகும். புதிய அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகளை கேரள அரசு கிளப்புகிறது.
ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு அணையின் உயரத்தை அதிகரிக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் திட்டவட்டமான ஒரே கோரிக்கை. அதில் நாங்கள்உறுதியாக இருந்தோம்.
மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சிக்கலாம் எனஅமைச்சர் சைபுதீன் ஜோஸ் கூறியுள்ளார் என்றார் துரைமுருகன்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications