மூடநம்பிக்கை Vs
சென்னை:பெரியார் சிலை மீதான தாக்குதல் மற்றும் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்களைக்கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியவை நடத்தும்போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக இந்திய மக்கள் மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார் உயர்நீதிமன்றத்தில்பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதசுவாமி கோவில் அருகே பெரியார் சிலைவைக்கப்பட்டது. அந்த சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது அமைதிசீர்குலைந்தது.
அதே இடத்தில் மீண்டும் சிலை வைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்துமக்கள் கட்சி சார்பிலும், அவர்களை எதிர்த்து தி.கவினரும் போராட்டத்தில் குதித்தனர்.இதனால் பொது அமைதிக்கு கேடு ஏற்பட்டுள்ளது.
பெரியார் சிலை தாக்குதலைக் கண்டித்து கடந்த 16ம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்புபோராட்டம் நடத்தப்படும் என தி.க. அறிவித்தது. இதற்கு பதிலடியாக வருகிற 30ம்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் செல்லும் பக்தர்கள் பெரியார் சிலை மீதுகல் எறியும் போராட்டத்தை நடத்த இந்து மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எனவே இரு அமைப்புகளின்போராட்டங்களுக்குபம் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வருக்குஎனது அமைப்பின் சார்பில் மனு அனுப்பப்பட்டது. ஆனால் அரசு இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்தப் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சந்துரு ஆகியோர் விசாரித்தனர்.
இதுதொடர்பாக உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் தான் புகார் அளிக்கமுடியும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications