சிவகாசி பராக் பராக்: வெளியே வருகிறார் ஜெயலட்சுமி
திருச்சி:சிவகாசி ஜெயலட்சுமி மீதான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் இன்னும் ஓரிருநாட்களில் அவர் சிறையிலிருந்து விடுதலை ஆகி வெளியே வருகிறார்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை நெருங்கிய தொடர்பு வைத்து அத்தனை பேரையும் வளைத்துப் போட்டது உள்ளிட்டபல்வேறு வழக்குகளில் சிக்கி சிவகாசி ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் டிஎஸ்பி ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிவகாசிஜெயலட்சுமிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே ஜாமீன்கிடைத்து விட்டது.
அடுத்து தற்போது நகை மோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில்நகைக் கடை நடத்திய திருமூர்த்தி என்பவரை ஜெயலட்சுமியும், இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவும் அணுகி ரூ.45,000 ரூபாய்க்கு நகை வாங்கினர். அப்போது பெண் போலீஸ் எஸ்.ஐ போல உடை அணிந்து வந்தாராம்ஜெயலட்சுமி.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவகாசி ஜெயலட்சுமிதிருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தெய்வராஜ், ரூ. 2000 தனி நபர் மற்றும் ரூ. 25 ஆயிரம்பிணைப்பத்திரத்தை தாக்கல் செய்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து ஜெயலட்சுமி விரைவில் விடுதலை ஆகி வெளியேவருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications