பெண்களாலும் ஜனாதிபதி ஆக முடியும்: கலாம்
கோவைபெற்றோர்கள் லஞ்சம் வாங்குவதாக தெரிந்தால் அவர்களை பிள்ளைகள் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள அப்துல் கலாம் கோவை கொடீஷியா அரங்கில் நடைபெற்ற மாணவர்களுடனானகலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு அப்துல்கலாமிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கலாம் பதிலளிக்கையில், நமது நாட்டை எப்படிலஞ்ச லாவண்யம் இல்லாத நாடாக மாற்றுவது என்று கேட்கிறீர்கள்.
லஞ்ச லாவண்யமற்றதாக நமது நாட்டை மாற்றுவது சாத்தியமானதுதான். அந்த முயற்சி முதலில் நமதுவீடுகளிலிருந்து தொடங்க வேண்டும். நமது தந்தையோ, தாயோ லஞ்சம் வாங்குவதாக தெரிந்தால், அவர்களின்பிள்ளைகள் நேரடியாக அவர்களிடம் சென்று நீங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் செயல்பட ஆரம்பித்தால் இந்த நாட்டை லஞ்ச லாவண்யமற்ற நாடாகநமது நாட்டை மாற்றுவது சாத்தியமானதுதான்.
ஆரோக்கியமான அரசியலை ஏற்படுத்த மாணவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. மாணவர்களும்,படித்தவர்களும் அரசியலுக்கு வருவதன் மூலம் அரசியலை ஆரோக்கியமானதாக மாற்ற இயலும்.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க தற்போது விவாதங்கள் நடந்து வருகின்றன. அப்படி இட ஒதுக்கீடுகிடைத்தால் இந்திய குடியரசுத் தலைவராக ஒரு பெண்ணால் வர முடியும் என்றார் கலாம்.
பின்னர் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழககத்தில் நடந்த மாணவர்கள் கலந்துரையாடல்நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த கலந்துரையாடலில் 6000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications