முல்லை பெரியாறு: மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாகமுதல்வர் கருணாநிதி கூறினார்.

இரு மாநில பொதுப் பணித்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது கேரளம்சம்பந்தமில்லாமல் புதுப் புதுப் பிரச்சனைகளைக் கிளப்பியது. இதனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கேரள முதல்வருடன் கருணாநிதி நடத்திய பேச்சும் தோற்றது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் முதுகில் குத்தும் வேலையை செய்து வரும் கேரளம், டெல்லியில்உள்ள தனது அமைச்சர்கள், எம்.கே. நாராயணன் போன்ற பிரதமருக்கு நெருக்கமான அதிகாரிகளின்உதவியோடு மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை குப்பையில்போட்டுவிட்ட கேரளம், அந்த உத்தரவை செயலிழக்கச் செய்ய சட்டம் கொண்டு வந்தது.

இப்போது புதிய அணை கட்டலாம், பழைய அணையை உடைக்கலாம் என ஓவர் விவரம் காட்டி வருகிறது.அத்தோடு நில்லாமல் பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனியின் உதவியோடு கடற்படையை கொண்டு வந்து ஆய்வுநடத்துவதாகக் கூறி தமிழகத்தை அதிரிச்சியில் ஆழ்த்தியது கேரளா.

இந் நிலையில் அமைச்சர்கள் மட்டத்தில் டெல்லியில் நேற்று நடந்த பேச்சும் தோற்றது. இந் நிலையில் இன்றுகருணாநிதி கூறியதாவது,

கேள்வி: முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழர்களுக்கு முதல்வர் துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறார்களே?

பதில்: என்னைச் சொல்லியிருக்க மாட்டார்கள். முல்லை பெரியாறு அணையில் 142அடி நீர் தேக்கலாம் என்று 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று உச்சநீதிமன்றதீர்ப்பு அளித்து விட்டது. அதன் பிறகு இருபது நாட்கள் கழித்து மார்ச் 18ம் தேதி கேரளஅரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு சட்டத்தை இயற்றி பிரச்சனையைஉருவாக்கியது.

அந்த இடைவெளியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.அதைத் தான் முதல்வர் துரோகம் செய்து விட்டார் என்று சிலர் (வைகோ)பேசுகிறார்கள்.

கேரள அரசு இப்படி உச்ச நீதிமன்ற தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் என்று யார் தான்எதிர்பார்த்திருக்க முடியும். அதனால் பிப்ரவரி 27 முதல் ஆட்சியிலிருந்து மே 13ம்தேதி வரை முதல்வர் ஜெயலலிதா நேரடி நடவடிக்கையில் இறங்காமல் இருந்துஉச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடியது துரோகம் என்று குற்றம் சொல்ல முடியாது.

உண்மை இவ்வாறு இருக்கும் போது சிலர் அவலை நினைத்துக் கொண்டு உரலைஇடிப்பதால் என்ன பயன்?

கேள்வி: கேரள அரசியல் கட்சிக்காரர்களைப் போல நாமும் ஒரே குரல் கொடுத்தால்என்ன?

பதில்: அரசின் சார்பில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அப்படித் தான் ஒரேகுரலில் ஒலித்து அதன் அடிப்படையில் தீர்மானம் கூட நிறைவேற்றினோம். அதன்தொடர்ச்சியாக நடந்தவற்றையெல்லாம் சட்டப் பேரவையிலே கூட விளக்கிஉரையாறியிருக்கிறேன். அப்போதும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

கேள்வி: அமைச்சர்கள் பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு ஏற்படவில்லையே.அடுத்து என்ன?

பதில்: அனைத்துக் கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தையில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து தமிழக அரசின் சார்பாக எடுத்து வைத்தநியாயங்களை ஏற்று கொண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினைநிறைவேற்றுவதற்கு முன்வராத கேரள அரசின் போக்கைச் சுட்டி காட்டி உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நல்லெண்ண அடிப்படையில் மத்தியஅரசு முன்னிலையில் தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பேச்சு வார்த்தையில் உரிய பலன் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் உடனடியாக உச்சநீதிமன்றத்தையே அனுகி உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்த கோரியும்,

அணையை பலப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளும் போது கேரளஅரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தமிழக அரசுக்கு கேரள அரசு அதிகாரிகள்எந்தவித இடையூறையும் ஏற்படுத்தக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்தவேண்டுமென்று உத்தரவாதம் அளிக்குமாறு முறையீடு செய்து கொள்வதென்றும்,

அத்தகைய உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டுமென்றும் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம்கேட்டுகொண்டது.

அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அணையை பலமாக்கவும்,அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி தந்துவிட்டதைஇங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

தமிழகம் அனுப்பும் உணவு தானியம், காய்கறிகளை நம்பி இருக்கும் கேரளம் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம்விளைவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+