அத்வானிக்கு பஞ்ச் வைத்த மன்மோகன் சிங்
டெல்லி:எதிர்க்கட்சித் தலைவரான அத்வானி, தனது பிரதமர் ஆசை நிறைவேற நீண்ட நாள்காத்திருக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
சமீபத்தில் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அத்வானி,
அடுத்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். பாஜகதலைவராக இருப்பவர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றஅவசியமில்லை. நான் பாஜக தலைவராக இருந்தபோது தான் வாஜ்பாயை பிரதமர்பதவிக்கு பரிந்துரைத்தேன். அதே போல இம்முறை எனது பெயர் பரிந்துரைக்கப்படவேண்டும். ஆனால், அதை வாஜ்பாய் செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன்என்றார்.
இந் நிலையில், மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்பேசுகையில், இந்திய-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தால் (அதை இடதுசாரிகள்எதிர்ப்பதால்) ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி கவிழும் என்று அத்வானி பீதிஉண்டாக்குகிறார்.
அவர் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார். ஆனால், அது நடக்காது.எனது தலைமையிலான ஆட்சியை அத்வானியால் கவிழ்க்க முடியாது. அவரின் கனவுநிறைவேற அவர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
மேலும், தனது ஆசை நிறைவேற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆசியையும்அத்வானி பெற்றாக வேண்டும் என்று பாஜகவுக்கு பஞ்ச் வைத்தார்.
வழக்கமாக இவ்வாறு தடாலடியாகப் பேசாதவர் மன்மோகன் சிங். ஆனால்,முதல்முறையாக பாஜகவின் உள்கட்சி விவகாரத்தையும் அத்வானியின் ஆசையையும்முடிச்சு போட்டு மக்களவையில் பிரதமர் பேசியபோது காங்கிரஸ் எம்பிக்கள்மேஜைகளை தட்டோ தட்டு என்று தட்டினர். கை வலிக்கும் வரை தட்டினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications