சாந்தி பதக்கம் பறிப்பு: சோகத்தில் சொந்த ஊர்
புதுக்கோட்டை:தடகள வீராங்கனை சாந்தி, பாலினச் சோதனையில் தோல்வி அடைந்ததால் அவரது பதக்கத்தைத் திரும்பப் பெறஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ள செய்தி சாந்தியின் சொந்த ஊரில் பெரும் சோகத்தையும்,ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குறிச்சி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. சமீபத்தில் தோஹாவில் நடந்தஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சாந்தி. இவர்தான்தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதலில் பதக்கம் பெற்ற வீராங்கனை.
இப்போட்டிக்குப் பின்னர் நடந்த பாலினச் சோதனையில், சாந்திக்கு பெண்களுக்குரிய ஹார்மோன் அளவை விடமிகவும் குறைவாக இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து பதக்கத்தைப் பறிக்க ஆசியஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்தது. இந்தத் தகவல் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து சாந்தியிடமிருந்து பதக்கத்தைத் திரும்பப் பெற்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் அளிக்குமாறுஇந்திய தடகள சங்கத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
சாந்தி விவகாரம் அவரது கிராமத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சாந்திபதக்கம் பெற்ற செய்தி வந்தபோது, ஊரே ஒன்று திரண்டு சாந்தியின் பெற்றோரை சந்தித்து வாழ்த்துக்கள் கூறிஅகமகிழ்ந்தது.
இப்போது சாந்தியின் பதக்கம் பறிபோகும் தகவல் பரவியதும் ஊரே அதிர்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறது. சாந்திக்குஅநீதி இழைக்கப்பட்டு விட்டதாக ஊர் மக்கள் குமுறுகின்றனர். சாந்தியின் பதக்கத்தைப் பறிமுதல் செய்வதைஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கோபமாக கூறுகின்றனர்.
கட்டக்குறிச்சியைச் சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி கண்களில் நீர் மல்க கூறுகையில், இந்த செய்தி வந்தது முதல்யாரும் இங்கே நிம்மதியாக இல்லை. இரவெல்லாம் தூங்காமல் அத்தனை பேரும் கூடிக் கூடிப் பேசிகவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சாந்தியை சிறு வயது முதல் எனக்குத் தெரியும். சாந்தி இந்தக் கிராமத்தின் கண்மணி. எங்கள் கிராமத்தின்பெருமை அவர். யாரோ சாந்திக்கு வேண்டாத சிலர் செய்த சதிதான் இது என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்என்றார் லட்சுமி.
சாந்தியின் தங்கை சரளா தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார். 8வது படிக்கும் சரளாவைத் தேற்றமுடியாமல் கிராமத்தினர் பரிதவிப்புடன் அவருக்கு அருகிலேயே உள்ளனர். இந்த செய்தியை எப்படித்தான்எனது அம்மா, அப்பாவும், சாந்தியும் தாங்கிக் கொள்ளப் போகிறார்களோ என்று சரளா அழுதுகொண்டேகூறியது கிராமத்தினரையும் சேர்ந்து அழ வைப்பதாக இருந்தது.
சாந்தி விவகாரம் கட்டக்குறிச்சி கிராமத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications