தாலியை பறித்துக் கொண்டு ஓடிய ராணுவ வீரர்
சென்னை:பெண்ணிடமிருந்து தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய, முன்னாள் ராணுவவீரரை பொதுமக்கள் பிடித்து, சரமாரியாக அடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் ரெஜினா (28). இவர் இரவு 7 மணியளவில்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகவந்த வாலிபர் ஒருவர் ரெஜினா கழத்தில் இருந்த தாலி சங்கிலியைப் பறித்து கொண்டுஓடினார்.
ரெஜினா போட்ட கூச்சலைக் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் திரண்டனர்.சங்கிலியுடன் ஓடிய நபரை துரத்திப் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் அவரை தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்தரமேஷ்குமார் (26) என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது.
ரமேஷ்குமார் ராணுவத்தில் 1999 முதல் 2006 வரை டிரைவராக வேலை செய்துள்ளார்.தீவிரவாதிகளைத் தேடி ராணுவத்தினர் இரவில் வேட்டையில் ஈடுபடும்போது,வாகனங்களில் சத்தம் வராத வகையிலும், ஹார்ன் அடிக்காமலும் சென்று பிடிப்பதுவழக்கம்.
இவ்வாறு ரஜோரி பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ரமேஷ்குமார் பணியில் இருந்தபோது, தனது வாகனத்தின் ஹெட்லைட்டைபளிச்சிட வைத்ததோடு மட்டுமல்லாமல், ஹார்ன் வேறு அடித்துள்ளார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில்,ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ரமேஷ் குமார் ராணுவகோர்ட்டில் நிறுத்தப்பட்டு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் சொந்த ஊர் திரும்பிய ரமேஷ்குமார் வேலை எதுவும் இல்லாததால்,தாம்பரத்தில் தனது உறவினர் வீட்டுக்கு வேலை விஷயமாக வந்தார். வந்த இடத்தில்சும்மா இருக்க முடியாமல், சாலையில் சென்ற பெண்ணின் கழுத்தில் கையை வைத்து,நகையைப் பறித்து போலீசிடம் சிக்கிக் கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications