தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு-சோனியாவிடம் ராமதாஸ் நேரில் கோரிக்கை
சென்னை:நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக கட்சி நிருவனர் டாக்டர்ராமதாஸ் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் வலியுறுத்தினார்.
டெல்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார் ராமதாஸ். அப்போது உயர் கல்விநிறுவனங்களில் பிற்பட்டடோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தைநிறைவேற்றியதற்காக சோனியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் 5 கோரிக்கைகளையும் சோனியாவிடம் அவர் முன் வைத்தார்.
தனியார் துறையில் வேலைவாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கோரிய ராமதாஸ், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில்நலிவடைந்தவர்களுக்கு தனியார் துறையினரே முன்வந்து பல்வோறு சலுகைகளையும், வேலை வாய்ப்புகளையும்அளிக்கிறார்கள். அது போன்ற ஏற்பாட்டை இந்தியாவிலும் கொண்டு வர நீங்கள் உதவவேண்டும் என்றும்கேட்டுக் கொண்டார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடினருக்கும்,பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் போதிய அளவு பிரதிநிதித்துவம் இல்லையென்பதை சுட்டிக் காட்டிய ராமதாஸ்,இதிலும் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும் என்றார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு தேர்வாணையம் இருப்பது போல நீதிபதிகள்,நியமனத்துக்கும் அனைத்து இந்திய நீதித்துறை தேர்வாணையத்தை உருவாக்கி, அதன் மூலம் இடஒதுக்கீட்டைஅமலாக்கலாம் என்ற யோசனையையும் கூறினார்.
தேசிய ஆறுகளை இணைப்பதற்கான திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். முதல் கட்டமாகமாநிலங்களுக்கிடையே பாயும் ஆறுகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடம் ராமதாஸ்வலியுறுத்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications