அத விடுங்கப்பா.. இளங்கோவன் சலிப்பு
சென்னை:திமுக அமைச்சரவையில் அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்காது. இனிமேலும் அந்தக் கோரிக்கையைவலியுறுத்துவதை விட்டு விட வேண்டும் என மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு பங்கு வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே வற்புறுத்தி வந்தஇளங்கோவன் இனிமேலும் அமைச்சர் பதவியை கேட்டு வற்புறுத்தக் கூடாது, அது கிடைக்காது என்றுகூறியுள்ளார்.
அவர் தனது 59வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் பங்கு தர வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமல்ல, காங்கிரஸ்தொண்டர்களின் ஆசையும் அதுதான்.
ஆனால் அமைச்சரவையில் காங்கிரஸுக்குப் பங்கு கிடைக்காது. அதை இனிமேலும் வற்புறுத்தி வருவதற்குப்பதில் மக்கள் பணிகளில் காங்கிரஸார் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
தொடர்ந்து வலிறுத்தியும் கிடைக்காத ஒன்றுக்காக தொடர்ந்து கேட்டு வருவது சரியல்ல. ஆட்சியில் பங்குகிடைக்காவிட்டாலும் கூட பொறுப்பான எதிர்க்கட்சியாக காங்கிரஸால் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும்.
அரசின் நல்ல திட்டங்களை பாராட்டும் அதே நேரத்தில் குறைகளையும் சுட்டிக் காட்ட காங்கிரஸார் தவறக்கூடாது. காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சில தலைவர்களே (வாசனை சொல்கிறார்) முட்டுக்கட்டையாக உள்ளனர். அவர்களை மீறி காங்கிரஸார் செயல்பட்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
