பீதியை கிளப்பும் கன்னியாகுமரி கடல்
கன்னியாகுமரி:கன்னியாகுமரி கடல் பகுதியில் தீடீரென பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. திடீரென கடல் உள்வாங்கியதோடு, திடீரென 15அடி உயரத்துக்கு அலைகளும் எழும்பி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.
![]() |
இதனால் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாகவே கடலின் தன்மையில் மாற்றம் காணப்பட்டு வருவதால் பூம்புகார் போக்குவரத்துக்கழகம் சார்பில்நடத்தப்படும் படகு சர்வீஸ் அவ்வப்போது ரத்து செய்யப்பட்டு வருகிறது.
நேற்று திடீரென அதி வேகத்தில் சூறைக்காற்றுடன் கடலில் அலைகள் பெரும் உயரத்துக்கு எழும்பின. இதனால் விவேகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலை பாறையில் நின்றிருந்தவர்கள் பீதிக்கு உள்ளாயினர். படகுகளும் வரவில்லை. 2 மணி நேரத்துக்குப்பின் படகுகள் வந்து சுற்றுலா பயணிகளை திரும்பி அழைத்துச் சென்றன. அத்தோடு படகு சர்வீசும் ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கன்னியாகுமரியின் சங்கிலித்துறை என்ற இடத்தில் கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு கடல்உள்வாங்கிவிட்டது. இதனால் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் வெளியில் தலைகாட்டின.
சென்னை கடலில் படகு கவிழ்ந்தது:
இந் நிலையில் சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் சிக்கிய 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை அயோத்தியா குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் 2 பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிகொண்டிருந்தபோது திடீர் என காற்று வேகமாக வீசியது. இதைத் தொடர்ந்து எழுந்த ராட்சத அலையில் பைபர் படகுகள் சிக்கி தத்தளித்தன. இதில் ஒருபடகு கடலில் கவிழ்ந்தது.
படகில் இருந்து மீனவர்கள் கடலில் மூழ்கினார்கள். படகு காற்றிலும் அலையிலும் சிக்கி தத்தளித்ததை கரையில் இருந்து பார்த்த மீனவர்கள் படகைஎடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றனர்.
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தசரதன் (40), ஆண்டி முனுசாமி (45), கிருஷ்ணன் (45), வச்சிரவேலு (40) மற்றொரு கிருஷ்ணன் (40) ஆகிய 6மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். கடலில் விழந்த மீனவர்கள் தண்ணீரை அதிகமாக குடித்திருந்ததால் அவர்கள் மயக்கம்அடைந்தனர். இதைதொடர்ந்து அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.













Click it and Unblock the Notifications