பிரதமர் பதவி- அத்வானிக்கு ஜோஷி செக்
டெல்லி:பாஜகவில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நிறைய பேர் உள்ளனர். இருப்பினும்எங்களைப் பொறுத்தவரை வாஜ்பாய்தான் நம்பர் ஒன் சாய்ஸ் ஆக உள்ளார் என்றுமுன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
பாஜகவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானிக்கும்இடையே கடும் பூசல் நிலவி வருகிறது. பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடுவேன்என அத்வானி கூறி வருகிறார்.
அதேசமயம், எனக்கு இன்னும் வயதாகி விடவில்லை. நானும் போட்டியிடத்தயாராகவே இருக்கிறேன் என வாஜ்பாயும் கூறியுள்ளார். இதனால் இவர்கள்இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அத்வானியின் தீவிர எதிர்ப்பாளரான மூத்த பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷி கூறுகையில், வாஜ்பாய் போட்டியிலிருந்து விலக முடிவு செய்யும்வரை அவர்தான் எங்களது தலைவர்.
பிரமதர் பதவிக்கு நிறையப் போர் போட்டியிடும் ஆவலில் உள்ளனர். இருந்தாலும்வாஜ்பாய்தான் இப்போதைக்கு எங்களது நம்பர் ஒன் சாய்ஸ் என்றார் ஜோஷி.
தற்போது லக்னோவில் நடந்து வரும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திலும்முக்கியப் பிரச்சினைகளை விட அடுத்த பிரதமர் யார் என்ற விவாதம்தான் கட்சியினர்மத்தியில் பலமாக அடிபடுகிறது.
உ.பி. தேர்தல் குறித்த முக்கிய உத்திகள் குறித்து இன்னும் விரிவாகவிவாதிக்கப்படவில்ல. அதேபோல காங்கிரஸ் கூட்டணி அரசின் குளறுபடிகள்,குறைபாடுகள் குறித்து விவாதிக்க அதிக ஆர்வம் காணப்படவில்லை.
அதேபோல இஸ்லாமியர்களை காங்கிரஸ் கட்சி ஈர்க்கப் பார்க்கிறது என்று முன்புபலமாக குற்றம் சாட்டிய பாஜகவினர் இப்போதைய தேசிய செயற்குழுக் கூட்டத்தில்அதுகுறித்து பெரிதாக விவாதிக்க ஆர்வம் காட்டவில்லை.
உ.பி. சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை முதல்வர் முலாயம் சிங் யாதவுடனோஅல்லது மாயாவதியுடனோ கூட்டணி வைக்க பாஜகவில் ஆர்வம் இல்லை. அங்குதனித்துப் போட்டியிடுவதில்தான் அக்கட்சி அதிக ஆர்வம் காட்டுகிறது.
இந்தப் பிரச்சினைகளை விட அத்வானியை அடுத்த பிரதமர் வேட்பாளராக ஏற்கலாமாஎன்பதுதான் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications