ம.ஜ.தளத்திலிருந்து தேவே கெளடா டிஸ்மிஸ்
திருவனந்தபுரம்:மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர்தேவே கெளடா நீக்கப்பட்டார்.
தேவே கெளடா தலைமையில் செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி,சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்துஆட்சியைப் பிடித்தது.
இந்தக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக தேவே கெளடாவின் மகன் குமாரசாமிபொறுப்பேற்றார். மதச்சார்பற்ற என்ற பெயரை வைத்துக் கொண்டு பாஜகவுடன்கெளடா கூட்டணி வைத்தது அவரது கட்சியின் சில தலைவர்களுக்குப்பிடிக்கவில்லை.
இதனால் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. முன்னாள் மத்திய அமைச்சரானவீரேந்திரகுமார் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துப் பேசி வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீரேந்திக குமார் தலைமையிலான கேரளமாநில மதச் சார்பற்ற ஜனதாதளத்தை கலைத்து விட்டதாக கெளடா அதிரடியாகஅறிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீரேந்திர குமார் கோஷ்டியினர் நேற்றுதிருவனந்தபுரத்தில் கட்சியின் தேசிய செயற்குழுவைக் கூட்டினர். இதில் 28 பேர்கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேவே கெளடாவை கட்சியை விட்டு நீக்கி முடிவெடுக்கப்பட்டது.மேலும், கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதாதளத்தையும் கலைத்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் புதிய தலைவராக சுரேந்திர மோகன் தேர்வு செய்யப்பட்டார். ஒழுங்குநடவடிக்கைக் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக புதுச்சேரியைச்சேர்ந்த கணேஷ் அறிவிக்கப்பட்டார்.
இன்று நடைபெறும் தேசிய கவுன்சில் கூட்டத்தில், கெளடா நீக்கத்துக்கு ஒப்புதல்பெறப்படவுள்ளதாக வீரேந்திர குமார் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications