மாணவிகளிடம் ஆபாசம்: பேராசிரியர் நீக்கம்
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் பல்கலைக்கழக மாணவிகளிடம் ஆபாசமாக பேசிவந்த பேராசிரியர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் பிரபலமான காந்திகிராம் பல்கலைக்கழகம்உள்ளது. காந்தியடிகள் போதித்த சுதேசி தொழில்களை ஊக்குவித்து, பிரலப்படுத்தும்நோக்கில் இங்கு பல்வேறு கல்வி முறைகள் மாணவ, மாணவியருக்குப்போதிக்கப்படுகின்றன.
![]() |
இத்தகைய பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வந்தகுணசீலன் என்பவரால் இந்தப் பல்கலைக்கழகத்தின் பெருமைக்கு தற்போது மாசுஏற்பட்டு விட்டது.
கடந்த ஜூன் மாதம் இப்பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவில்குணசீலன் (41) என்பவர் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
எம்.சி.ஏ. வகுப்புகளை இவர் எடுத்தார். மாணவிகளிடம் இவர் எப்போதுமேஆபாசமாகத்தான் பேசுவாராம். இரட்டை அர்த்தத்துடன் பேசுவது, மோசமானவார்த்தைகளால் திட்டுவது, பச்சையாக பேசுவது என சகலவித சாக்கடைத்தனத்தையும்செய்து வந்துள்ளார் குணசீலன்.
மாணவிகளிடம் குணசீலன் பேசிய ஆபாச பேச்சுக்களுக்கு சில உதாரணங்களாகமாணவிகள் கூறியவை: நீங்கள் மாணவர்களுடன் கபடி விளையாடுங்கள், நான்நடுவராக இருந்து வேடிக்கை பார்க்கிறேன்; உங்களையெல்லாம் மேய்க்கஎன்னால்தான் முடியும். இப்படிச் செல்கிறது குணசீலனின் ஆபாச பேச்சுக்கள்.
தனது பேச்சுக்கும், செயல்களுக்கும் ஒத்துவராத மாணவிகளை செமஸ்டரில் பெயில்ஆக்கி விடுவேன் என்று மிரட்டுவாராம் குணசீலன். இவரின் கொடுமைகளைப் பற்றிஎம்.சி.ஏ. மாணவிகள், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கருணாகரனிடம் புகார்கொடுத்தனர்.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க 3 பேராசிரியர்களைக் கொண்ட குழுவைதுணைவேந்தர் அமைத்தார். ஆனால் விசாரணை முடிந்து அறிக்கை கொடுப்பதில்தாமதம் நிலவியதாக கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்புதான் விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம்கொடுக்கப்பட்டது. அதில், ஆசிரியர் குணசீலன் சில தவறுகளைச் செய்துள்ளதாகவும்,எனவே இனிமேல் அவரை எம்.சி.ஏ. வகுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டாம்.அதற்குப் பதில் அவருக்கு நிர்வாகத்தில் வேறு பணி கொடுக்கலாம் எனவும்பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
![]() |
இதை அறிந்த மாணவிகள் கொதிப்படைந்தனர். இந்த நிலையில் நேற்று காலைபல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. இதில் அனைத்துமாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு கூடிய எம்.சி.ஏ.மாணவ, மாணவியர் ஆசிரியர் குணசீலனை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்று கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துணைவேந்தர், பதிவாளர், டீன்,துறைத் தலைவர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் அனைவரும் அவசர ஆலோசனைநடத்தினர்.
இதன் இறுதியில் குணசீலனை டிஸ்மிஸ் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்தமுடிவு மாணவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.
தனது பதவிநீக்கம் குறித்து குணசீலன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம்ஆலமரத்துப்பட்டியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த முகாம் நடந்தது.
இதில் கிராம மக்களுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் போஸ்டர்கள்தயாரிப்பது குறித்து மாணவ, மாணவியருடன் ஆலோசித்தேன். அப்போது எந்தவார்த்தையைப் போட்டால் சரியாக இருக்கும் என்று அவர்களுக்கு ஆலோசனைகொடுத்தேன்.
இதை நான் செக்ஸியாக பேசியதாக கூறி பிரச்சினையைக் கிளப்பி என்னை நீக்கிவிட்டார்கள். இதை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications