ஜோர்டான் கப்பலை புலிகள் கடத்தினர்-இலங்கை
கொழும்பு:இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற ஜோர்டான் நாட்டுக் கப்பல் என்ஜின் செயல்பாட்டை இழந்துஇலங்கையின் முல்லைத் தீவுக்கு அருகே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிக்குள்நுழைந்தது.
இதையடுத்து அந்தக் கப்பலில் புலிகளின் கடற்படையினர் ஏறி சோதனை நடத்தினர்.
ஆனால், இந்தக் கப்பலை புலிகள் கடத்திவிட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பர்ஹா-3 என்ற கப்பல் 23 ஊழியர்கள் மற்றும்14,000 டன் அரிசியுடன் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து தென் ஆப்பி>க்காவின் டர்பன் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.
இலங்கையின் முல்லைத் தீவு அருகே புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியில் சென்றபோது அதன்என்ஜின்கள் பழுதாயின. இதனால் கப்பல் முல்லைத் தீவு நோக்கி நகர்ந்தது. இதையடுத்து அந்தக் கப்பலில்விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏறி அதை கைப்பற்றிக் கொண்டனர்.
கப்பலை கடல் புலிகள் கைப்பற்றியது குறித்து இங்கிலாந்தின் பால்மவுத் நகரில உள்ள கடல் மீட்புஒருங்கிணைப்பு மையத்திற்கு கப்பல் ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மையத்திலிருந்துஇலங்கை கடற்படைக்கும் தகவல் வந்தது.
கப்பலில் இருந்தவர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள். கப்பலுடன் தொடர்பு கொள்ளஇலங்கை கடற்படை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. தகவல் தொடர்பை புலிகள்துண்டித்து விட்டதாக தெரிகிறது என்றனர்.
முல்லைத் தீவிலிருந்து 3 கடல் மைல் தொலைவில் கப்பல் இருப்பதாக தெரிகிறது. அங்குதான் புலிகளின் கடல்புலிகள் பிரிவின் கடற்படைத் தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் கூறுகையில், ஈழம் கடற் பகுதிக்குள்கப்பல் நுழைந்ததைக் கண்டு எங்கள் கடற்புலிகள் அந்தக் கப்பலில் ஏறி சோதனையிட்டனர். அப்போது அந்தக்கப்பல் என்ஜின் செயல்பாட்டை இழந்தது தெரியவந்தது. அது எதிரிக் கப்பல் இல்லை என்பதுஉறுதியானதையடுத்து கப்பலில் இருப்பவர்களுக்கு எங்கள் படையினர் உதவிகளை செய்து வருகின்றனர்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications