வைகோ பின்னால் 35 மா.செக்கள் அணிவகுப்பு
சென்னை:தங்களுடன் வருமாறு கோரி அனைத்து மாவட்ட செயலாளர்களையும்எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தொலைபேசியில் கெஞ்சி வருவதாககூறப்படுகிறது. அதேசமயம், வைகோவின் பாதயாத்திரையில் 35 மாவட்டசெயலாளர்களும் அணிவகுத்து வைகோவின் பின்னால் அனைவரும் இருப்பதைஉணர்த்தியுள்ளனர்.
வைகோவுக்கு எதிராக மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும், எம்.பி. செஞ்சிராமச்சந்திரனும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாங்களே உண்மையான மதிமுகஎன்று கூறி வரும் இருவரும் தங்களுக்கு ஆதரவாக உள்ள மாவட்டசெயலாளர்களுடன் நேற்று முதல் ஆலோசனையைத் தொடங்கியுள்ளதாகதெரிவித்தனர்.
ஆனால் இதுவரை எத்தனை மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குப் பின்னால்உள்ளனர் என்பதை எல்.ஜியும், செஞ்சியும் தெரிவிக்கவில்லை. நேற்று நடந்தஆலோசனைக் கூட்டத்திலும் கூட செஞ்சியார், எல்.ஜி.யாரைத் தவிர வேறு எந்தமாவட்ட செயலாளரும் வந்தது போலத் தெரியவில்லை.
மேலும், செய்தியாளர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் பேசுகையில், தொலைபேசியில்ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றுதான் கூறினார். எல்.ஜி.யும், செஞ்சியாரும்எதிர்பார்த்தது போல மாவட்ட செயலாளர்கள் யாரும் அவர்கள் பின்னால் வரத்தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சியும் கூட பலன் தரவில்லை என்றுதெரிகிறது. செஞ்சியும், எல்.ஜியும் தொலைபேசி மூலம் ஒவ்வொரு மாவட்டசெயலாளரையும் தொடர்பு கொண்டு நமது அணிக்கு வந்து விடுங்கள் என்றுகெஞ்சாத குறையாக கோரி வருகின்றனர்.
ஆனால் எல்.கணேசன் அணிக்கு பதிலடி தரும் வகையில் நேற்று நடந்த வைகோநடைப்பயணத்தில் மதிமுகவின் 35 மாவட்ட செயலாளர்களும் அவருடன்நடைப்பயணத்தில் கலந்து கொண்டு அணி வகுத்து வந்தனர்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளவைகோ நேற்று காலை தேனி மாவட்டம் வீரபாண்டியிலிருந்து நடைப்பயணத்தைத்தொடங்கினார். உப்பார்பட்டி விலக்கு, கோட்டூர் வழியாக சீலையம்பட்டிக்கு வந்தார்.அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சின்னமனூரை மதியம் வந்தடைந்தார். வரும்வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் கூடி வைகோவுக்கு கை காட்டி வரவேற்புகொடுத்தனர். பேருந்துகளில் சென்றவர்களும் வைகோவைப் பார்த்து குரல் கொடுத்துகைகாட்டினர். வைகோவும் பதிலுக்குக் கைகாட்டினார்.
கடும் வெயில் கொளுத்தியதால் வைகோவுக்கு ஆங்காங்கே இருந்த இள நீர்வியாபாரிகள் இளநீர் கொடுத்து உபசரித்தனர். வைகோவும் அந்த அன்பை வாங்கிப்பருகியபடி தொடர்ந்து நடந்தார்.
மாலையில், சின்னமனூரிலிருந்து கிளம்பி உத்தமபாளையத்தை வைகோ அடைந்தார்.நேற்றைய நடைப்பயணத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் அவருடன்மதிமுகவின் 35 மாவட்ட செயலாளர்களும் அணி வகுத்துச் சென்றதுதான்.
இவர்கள் தவிர எம்.எல்.ஏக்கள் கண்ணப்பன், வீர இளவரசன், கம்பம் ராமகிருஷ்ணன்ஆகியோரும், எம்.பிக்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், டாக்டர் கிருஷ்ணன்ஆகியோரும் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
வைகோவுடன் கலந்து கொண்ட மா.செக்கள்:
வேளச்சேரி மணிமாறன் (தென் சென்னை), ஜீவன் (வட சென்னை), வீர இளவரசன்(மதுரை மாநகர்), புதூர் பூமிநாதன் (மதுரை புறநகர்), சரவணன் (நெல்லை), ரத்தினராஜ்(கன்னியாகுமரி), புலவர் சிவந்தியப்பன் (சிவகங்கை), சோயல் (தூத்துக்குடி),சண்முகசுந்தரம் (விருதுநகர்), ஜெயராமன் (ராமநாதபுரம்), துரை பாலகிருஷ்ணன்(தஞ்சாவூர்), செல்வராகவன் (திண்டுக்கல்), மகாலிங்கம் (நாகப்பட்டனம்),சந்திரசேகரன் (புதுக்கோட்டை).
தாமரைக்கண்ணன் (சேலம்), நடராஜன் (திருச்சி), மலர்மன்னன் (திருச்சி மாநகர்),ராமகிருஷ்ணன் (தேனி), அத்தாரி நஞ்சன் (நீலகிரி), மாரியப்பன் (கோவை), குருசாமி(நாமக்கல்), செங்குட்டுவன் (திருவள்ளூர்), பத்மநாபன் (கடலூர்), மாசிலாமணி(விழுப்புரம்), பன்னீர் (வேலூர் மேற்கு), உதயக்குமார் (வேலூர் கிழக்கு), பாலவாக்கம்சோ. (காஞ்சிபுரம்), கணேசமூர்த்தி (ஈரோடு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுவை மாநில செயலாளர் கவிஞர் மணிமாறனும் நடைப்பயணத்தில் பங்கேற்றார்.அனைத்து மாவட்ட செயலாளர்களும் வைகோவுடன் நடைப்பயணத்தில் கலந்துகொண்டது மதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதைக்காண முடிந்தது.
இச் சூழ்நிலையில், தற்போதைய நிலையில் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும்மட்டுமே அதிருப்தி அணியில் இருப்பது வெளிச்சமாகியுள்ளது. எல்.ஜி. அணியின்கை தாழ்ந்து வருவதையும் உணர முடிகிறது.
25ம் தேதி நடைபெறவுள்ள பொதுக் குழு உள்ளிட்ட அனைத்துக் குழுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு உறுப்பினருக்கும்வைகோவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அனைத்து வகையிலும் இந்தக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, எல்.ஜி,செஞ்சியாருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என அவர் உறுதியுடன்இருப்பதாக மதிமுக தரப்பு கூறுகிறது.
கலவரம் நடத்த சதி:
இதற்கிடையே, உத்தமபாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோபேசுகையில், நடைப்பயணத்தின் நிறைவு நாளின்போது கம்பம், கூடலூரை நான்சென்றடைவதற்கு முன்பு கலவரம் ஏற்படுத்த சதி நடப்பதாக எனக்குத் தகவல்கிடைத்துள்ளது.
நாம் செல்கின்ற பயணத்தின்போது சிலர் வதந்தி பரப்பலாம், மதிமுக தொண்டர்கள்அமைதி காத்து நமது கட்டுப்பாட்டை காக்க வேண்டும். 13 ஆண்டுகளாக கட்சியைகட்டுக்கோப்பாக, அமைதியாக நடத்தி வருபவர்கள் நாம். எனவே பொறுமை காத்துசதியை முறியடிக்க வேண்டும்.
கட்சியை சீர்குலைக்கவும், நாளை (இன்று) நடக்கும் நடைப்பயணத்தின்போதுவன்முறையை ஏற்படுத்தவும், திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இப்போது எனக்குத்தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல, மதிமுக கரை வேட்டிகளை கட்டிக் கொண்டு ரவுடிகளை ஏவி பொதுக்குழுக் கூட்டத்தில் ரகளை மற்றும் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு, கலவரத்தைஏற்படுத்தி, தாயகத்தைக் கைப்பற்ற சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
இதை மதிமுக சந்திக்கும், மதிமுக தொண்டர்கள் பொறுமை காத்து, அதைமுறியடிப்பார்கள் என்றார்.
இன்று நடைபயணம் நிறைவு:
இன்று கம்பம் வழியாக கூடலூர் சென்று தனது நடைப்பயணத்தை நிறைவு செய்கிறார்வைகோ. இன்று மாலை 4 மணிக்கு கூடலூரில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் அவர் நாளை எல்.ஜி.,செஞ்சி விவகாரம் குறித்து விரிவாக கட்சியினருடன் விவாதிக்கிறார்.
நாளை மறுதினம் மதிமுகவின் பொதுக் குழு உள்ளிட்ட முக்கிய குழுக்கள் கூடுகின்றன.












Click it and Unblock the Notifications