நள்ளிரவில் அந்தமானை உலுக்கிய பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நள்ளிரவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு தப்பிஓடினர்.
தெற்கு அந்தமானில் நள்ளிரவு 1.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். உயிர் தப்பிக்க பாதுகாப்பான இடங்களைத் தேடி நள்ளிரவில்பொதுமக்கள் ஓடினர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும்ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சுனாமி அலைத் தாக்குதலில் அந்தமான் தீவுகள் பெரும் சேதத்தைசந்தித்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications