சோனியாவுக்கு அல்-கொய்தா குறி?!
டெல்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கொலை செய்ய அல் கொய்தா அமைப்புதிட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சோனியாவுக்குவழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருங்கிணைந்த ஜிகாத் கவுன்சில் என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்தஅமைப்பு அல் கொய்தாவுடன் இணைந்த ஒரு கிளை அமைப்பாகும்.
இந்தப் பணிக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், போலியான ஆவணங்கள் மூலம் சோனியாவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்படையில் ஊடுறுவி, மனித வெடிகுண்டாக மாறி சோனியாவைக் கொல்லத்திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சோனியாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புஅதிகப்படுத்தப்பட்டுள்ளது. சோனியா காந்தி விரைவில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளஉ.பி. மாநில போலீஸுக்கும் இந்தத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு சோனியாகாந்தி பிரசாரம் செய்ய வரும்போது அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டள்ளது.
இதேபோல டெல்லி உள்ளிட்ட அண்டை மாநில போலீஸாரும்உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சோனியா காந்தி காரில் செல்லும்போது போக்குவரத்தைநிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை செயலாளர் வி.கே.துக்கல் ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் இது வழக்கமான ஆய்வுதான். இதுவிழாக்காலம். மேலும், குடியரசுத் தின விழா வருகிறது. நான்கு மாநில தேர்தல்கள்வரவுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்துஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சோனியா காந்தியின் உயிருக்கு மிரட்டல் எழுந்துள்ளதால், பாதுகாப்புநடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறுபாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்ததப்பட்டுள்ளது என்றார் துக்கல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications