போலி பிஷப் ஆனந்தராஜிடம் மீண்டும் விசாரணை
சென்னை:வீடு கட்டும் திட்ட மோசடியில் போலி பிஷப் யோபு சரவணனின் குருவான ஏற்கனவே கைதாகி சிறையில்அடைக்கப்பட்டுள்ள போலி பிஷப் ஆனந்தராஜிடம் சிபிசிஐடிபோலீஸார் மீண்டும் தீவிர விசாரணைநடத்தியுள்ளனர்.
வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை மோசடிசெய்ததாக முதலில் போலி பிஷப் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து யோபு சரவணன்கைது செய்யப்பட்டார்.
யோபு சரவணன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ஆனந்தராஜ் செய்த மோசடியைப் பார்த்துத்தான்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். எனவே, ஆனந்தராஜுக்கும், யோபுவுக்கும் இடையேநெருங்கிய தாடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து ஆனந்தராஜை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து ஆனந்தராஜை போலீஸ் காவலில் விடுவிக்கக் கோரி திருக்கழுக்குன்றம் நீதித்துறை மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்தனர்.
இதை ஏற்ற நீதிபதி தங்கமாரியப்பன் ஜனவரி 3ம் தேதி வரை ஆனந்தராஜை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தராஜை போலீஸார் தங்களது காவலில் எடுத்து காஞ்சிபுரத்திற்குக்கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து அவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி சுப்பையா தலைமையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விசாரணையின்போது யோபுவுக்கும், ஆனந்தராஜுக்கும் இடையே தொடர்பு உள்ளதாஎன்பது குறித்து முக்கியமாக விசாரிக்கப்பட்டது.
மேலும், ஆனந்தராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, 500 பேரிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 20 கோடிபணத்தை தான் மோசடி செய்ததாக ஆனந்தராஜ் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
விசாரணையின் ஒரு கட்டமாக ஆனந்தராஜ் மோசடி செய்ததாக கூறப்படும் கர்நாடகம், ஆந்திரா, திருச்சி,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு அவரை கூட்டிச் சென்று விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications