சுனாமி பீதி: நாகையில் மக்கள் அச்சம்
நாகப்பட்டனம்:அந்தமானில் ஏற்பட்ட பூகம்பத்தால் நாகப்பட்டனத்தில் சுனாமி அலைத் தாக்குதல்ஏற்படும் என பீதி பரவியதால் மக்கள் குடும்பத்துடன் வீடுகளை விட்டு வேகம்வேகமாக வெளியேறினர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலில்நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். அந்த அச்சம் இன்னும்நாகை கடலோர பகுதி மக்களிடையே இன்னும் அகலாமல் உள்ளது.
இந்த நிலையில் அந்தமான் தீவுகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 முறைநிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நாகை கடலில் சுனாமி அலைத் தாக்குதல்ஏற்படலாம் என்ற அச்சம் நாகை கடலோரப் பகுதி மக்களிடையே பரவியது.
இதையடுத்து வீட்டிலிருந்த பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு மக்கள்குடும்பத்தோடு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடத் தொடங்கினர். இதனால் நாகையில்பெரும் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், வருவாய்த்துறைஅதிகாரிகளை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து, எந்தவித பாதிப்பும்வராது, மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என மைக் மூலம் பிரசாரம்செய்ய வைத்தார்.
இதைத் தொடர்ந்து மக்கள் பீதி அகன்று மீண்டும் வீடுகளுக்குத் திரும்பத்தொடங்கினர். இதேபோல வேதாரண்யத்திலும் சுனாமி பீதியை சிலர் கிளப்பினர்.பிறகு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் சென்று மக்களை அமைதிப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications
