எல்.ஜி., செஞ்சி மதிமுகவிலிருந்து நீக்கம்
சென்னை:மதிமுக அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து எல்.கணேசனும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்துசெஞ்சி ராமச்சந்திரனும் நீக்கப்பட்டுள்ளனர்.
வைகோவுக்கு எதிராக எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வைகோவைகடுமையாக விமர்சித்து இருவரும் பேட்டிகள் கொடுத்து வந்தனர்.
வைகோவுக்கு எதிராக கட்சியினரைத் திரட்டும் முயற்சியிலும் இறங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பாராதவகையில் ஒரு மாவட்டச் செயலாளரும் அவர்கள் பின்னால் வரத் தயாராக இல்லை என்பது வெட்டவெளிச்சமானது.
இந்த நிலையில் கட்சியின் பொதுக் குழு உள்ளிட்ட முக்கியக் குழுக்களின் கூட்டம் 25ம் தேதி நடைபெறும் எனவைகோ அறிவித்தார். இந்தச் சூழ்நிலையில், நேற்று திடீரென கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மையம், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள்கூட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்தது.
மதிமுக பொருளாளர் கண்ணப்பன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரனை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மான விவரம்:
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரனும் மதிமுகவின்ஒழுங்கு முறை குலையும் வகையில் நடந்து கொள்வதாலும், மதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்வகையில், செயல்படுவதாலும் இயக்கத்தை நிர்மூலம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடவடிக்கைகள்மேற்கொண்டு வருகிற திமுக தலைமையுடன் சேர்ந்து கொண்டு சதித் திட்டம் வகுத்து கட்சி விரோதநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாலும்;
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வரும் அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும், பொதுச் செயலாளருக்கு மதிமுக சட்ட விதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி உடனடியாக நீக்கி வைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இக்கூட்டம் ஒரு மனதாகதீர்மானிக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்தின்படி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்ஆகிய இருவரும் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து தற்காலிக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இதன் மூலம் இருவரும் கட்சியின் பொதுக் குழு, செயற்குழு, தலைமை நிர்வாகக் குழு, சொத்துப் பாதுகாப்புக்குழு, ஆட்சி மன்றக் குழு, உயர் நிலைக் குழு, அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்தகுதியை மதிமுக சட்டதிட்டத்தின்படி இழந்தவர்கள் ஆவர்.
எல்.கணேசன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு (வடக்கு) ஒன்றியம் கண்ணத்தங்குடி கீழையூர் கிளைக் கழகஉறுப்பினராகவும், செஞ்சி ராமச்சந்திரன் விழுப்புரம் மாவட்டம் வல்லம் (வடக்கு) ஒன்றியம், அவியூர் கிளைக்கழக உறுப்பினராகவும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று வைகோ விடுத்துள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்ததும் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுகவில் தமிழகம் மற்றும் புதுவையைச்சேர்த்து மொத்தம் 36 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் 32 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டச் செயலாளர் அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்று விட்டார்.கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு சம்மதம் தெரிவிப்பதாக இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கலந்து கொள்ள முடியவில்லை.நடவடிக்கைக்கு முழுச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டச் செயலாளர் மாரியப்பன் உடல் நலம் சரியில்லாமல் ஓய்வெடுத்து வருகிறார். அவரும்கட்சியின் நடவடிக்கைக்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டச் செயலாளர் வரவில்லை, தகவலும் தரவில்லை.
இன்றையக் கூட்டத்தில் உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் மொத்தம் 11 பேரில் எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரனைத் தவிர மற்ற 9 பேரும் கலந்து கொண்டனர். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 12பேரில் 10 பேர் பங்கேற்றனர். மலர் கண்ணன், சுப்பிரமணி ஆகியோர் உடல் நிலை சரியில்லாததால்பங்கேற்கவில்லை.
ஆட்சி மன்றக் குழு உருப்பினர்கள் 7 பேரில் 5 பேர் பங்கேற்று ஆதரவு கொடுத்தனர். கலந்து காள்ளாதகலைப்புலி தாணு, கே.சி. அழகிரி ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் 6 பேரும் கலந்து கொண்டனர்.
25ம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்களின் அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சிக்கு சம்பந்தமில்லாத ரவுடிகள் மூலம் ஏற்பாடுசெய்வதாக செய்திகள் வந்துள்ளன. அதை சந்திப்போம் என்றார் வைகோ.
வைகோவின் அதிரடி நடவடிக்கையால், எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் நாளைய சென்னை கூட்டத்தில்கலந்து கொள்ள முடியாது. முன்கூட்டியே எடுத்த நடவடிக்கை மூலம் நாளைய கூட்டத்தில் எல்.கணேசன்,செஞ்சியாரால் ஏற்படக் கூடிய சலசலப்புகளை வைகோ ஆஃப் செய்து விட்டார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications