ரத்தினவேல் தேவர் சிலை: கருணாநிதி திறக்கிறார்
சென்னை:மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி ரத்தினவேல் தேவரின் சிலையை திருச்சியில் ஜனவரி 28ம் தேதி முதல்வர்கருணாநிதி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து சிலை அமைப்புக் குழுத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை:
திருச்சி நகராட்சித் தலைவராக 13 ஆண்டுகள் சிறப்புற பணியாற்றியவர் ரத்தினவேல் தேவர்.
திருச்சி அருகே லாம்பரசம்பேட்டை என்ற இடத்தில் திருச்சி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது சொந்த செலவில் பிரமாண்டமான தண்ணீர்த் தொட்டியை கட்டியவர்.
இதற்காக இங்கிலாந்து அரசு அவரைப் பாராட்டிக் கெளரவித்தது. மேலும் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேருஆகியோரின் பாராட்டையும் அவர் பெற்றார்.
ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் அமைச்சரவை பதவியேற்றபோது அவரது அமைச்சரவையில் இடம் பெறதேவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த தேவர், மதுரையைச் சேர்ந்தடி.எஸ்.எஸ்.ராஜனை அமைச்சராக்குமாறு பரிந்துரைத்த பெருந்தன்மையான மனதுக்குரியவர்.
கடந்த ஆட்சியில் தேவருக்கு சிலை எழுப்புவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு கடந்தஆட்சியில் அனுமதி கிடைக்கவில்லை.
முதல்வராக கருணாநிதி பதவியேற்றவுடன் அவரை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைஏற்ற முதல்வர் கருணாநிதி, தேவருக்கு திருச்சியில் சிலை வைக்க அனுமதி கொடுத்தார்.
கடந்த 22ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்து சிலை வைக்க அனுமதி கொடுத்ததற்காக நன்றிதெரிவித்தோம். மேலும் சிலையை கருணாநிதியே திறக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தோம்.
முதல்வர் கருணாநிதியும் எங்களது அழைப்பை ஏற்றுக் கொணட் வருகிற ஜனவரி 28ம் தேதி சிலையைத் திறந்துவைக்க ஒப்புதல் அளித்தார்.
சிலை வைக்க அனுமதி கொடுத்தற்காகவும், சிலையைத் திறந்து வைக்க ஒப்புதல் கொடுத்ததற்காகவும் சிலைஅமைப்புக் குழு, திருச்சி மாநகர மக்கள் சார்பில் முதல்வருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுகூறியுள்ளார் கோபால்ஜி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications