கொன்று விடுவார்கள் என்பதால் போகலை-செஞ்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் என்னை தாக்கதிட்டமிட்டிருந்ததால் நான் அங்கு போகவில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது.முதலில் இந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும்கூறியிருந்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் இருவரும் வரவில்லை. எல்.ஜி. தஞ்சையில் இருந்தார். செஞ்சியார்மட்டும் சென்னையில் இருந்தார்.

ஏன் கூட்டத்திற்குப் போகவில்லை என்பதை செய்தியாளர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் விளக்கினார். அவர்கூறுகையில், அவைத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற கூட்டங்களை கூட்ட முடியும்.மதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் இதுதான் நடந்து வருகிறது.

இதுவரையில் நடைபெற்ற தேர்தல்களில் மதிமுக பெற்ற வெற்றி தோல்வி குறித்து விவாதிக்கதிட்டமிட்டிருந்தோம். நானும், எல்.கணேசனும் கலந்து கொண்டால், மாவட்டச் செயலாளர்கள் மனம் மாறி எங்கேஎங்கள் பக்கம் வந்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் அவசரம் அவசரமாக சட்டவிரோதமாக ஒருகூட்டத்தைக் கூட்டி எங்களை நீக்குவதாக அறிவித்தார்கள்.

இதன் பிறகு நடைபெற்ற கூட்டங்களில் தாயகத்தை கைப்பற்ற முயற்சி நடக்கிறது, உயர் நிலைக் குழுக் கூட்டத்தில்வன்முறையைத் தூண்ட சதி நடக்கிறது என்று வைகோ குற்றம் சாட்டி வந்தார்.

உண்மையிலேயே வைகோதான் தாயகத்தில் குண்டர்களைத் திரட்டி வைத்துள்ளார். வன்முறைக்கு இடம்அளிக்கக் கூடாது என்ற காரணத்தினால் தான் நாங்களும் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

செய்தியாளர்: சதி என்று எதைச் சொல்கிறீர்கள்? உங்களை கொலை செய்யும் திட்டம் இருந்ததாக கூறுகிறீர்களா.?

செஞ்சி: நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டு ஒத்துப் போவது போலத்தான்தெரிகிறது. எங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் முக்கியம் இல்லை. 29ம் தேதி சேலம் சுமங்கலி கல்யாணமண்டபத்தில் பொதுக்குழு நடக்கவுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்வார்கள்.

குடும்ப அரசியலை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் வைகோ. திமுகவில் மு.க.ஸ்டாலின் கட்சி பொறுப்புகளைவகித்து தேர்தலில் நின்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் வைகோவின் மகனுக்கும்,மதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியில் அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. ஆனால் கட்சிவிவகாரங்களிலும், நிர்வாகிகள் நியமனத்திலும் அவர் தலையிடுகிறார்.

வைகோ அதிமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். அப்படி அவர் வெளிவந்தால், தற்போது நாங்கள்எடுத்த முடிவு குறித்து மறு பரிசீலனை செய்வோம். நான் மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறுநடந்து கொள்வதாக கூறப்படுவது தவறு. எனக்கு பதவி மீது ஆசை இல்லை என்றார் செஞ்சி ராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+