ரெட் கிராசிடம் கப்பல் ஊழியர்கள்: புலிகள்
கொழும்பு:முல்லைத் தீவு அருகே கடலில் மூழ்கிய ஜோர்டான் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 25ஊழியர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுதலைப் புலிகள் இன்றுஒப்படைத்தனர்.
இந்தியாவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து தென் ஆப்பிரிக்காவின் டர்பன்நகருக்கு 14,000 டன் அரிசியை ஏற்றிக் கொண்டு ஜோர்டான் நாட்டுக் கப்பல் சென்றுகொண்டிருந்தது.
சனிக்கிழமை இரவு அந்தக் கப்பல் முல்லைத் தீவு அருகே வந்தபோது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து அங்கு விரைந்துவந்து கடல் புலிகள் பிரிவினர் ஜோர்டான் கப்பலையும், அதில் இருந்த 25ஊழியர்களையும் மீட்டு தங்களது பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
ஜோர்டான் ஊழியர்களை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று அவர்களை நல்லமுறையில் உபசரித்தனர். மேலும் டெல்லியில் உள்ள ஜோர்டான் தூதரகஅதிகாரிகளிடம் அவர்கள் பேசவும் ஏற்பாடு செய்து தந்தனர்.
சர்வதே செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளும் கிளிநொச்சி வந்து இவர்களைசந்தித்துப்பேசினர். தாங்கள் நலமுடன் இருப்பதாக ஜோர்டான் கப்பல் ஊழியர்கள்தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தங்கள் வசம் இருந்த 25 பேரையும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் விடுதலைப் புலிகள் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் மீடியா ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர்கூறுகையில், கப்பலின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் 24 பேரையும் சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கத்திடம் இன்று காலை கிளிநொச்சியில் வைத்து ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் தற்போது கொழும்பு நோக்கி சென்று கொண்டுள்ளனர் என்றுதெரிவித்தார்.
25 பேரும் விடுவிக்கப்பட்டதை இலங்கை கடற்படையும் உறுதி செய்துள்ளது.ஆனால் கப்பல் என்ன ஆனது என்பது தெரிவிக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications