சுனாமி-மீனவர்களுக்கு வீடு கொடுத்த காக்கும் கரங்கள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:சென்னை உதவும் கரங்கள் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் கானாத்தூர் அங்காளம்மன் குப்பம் பகுதியில்கட்டப்பட்ட சுனாமி நிவாரண வீடுகளை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக உதவும் கரங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் கானாத்தூர்அங்காளம்மன் குப்பம் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலில்கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

சுனாமி அலையில் சிக்கி இந்த மீனவர் கிராமமே சிதிலமடைந்து போனது. இங்கு உதவும் கரங்கள் சார்பில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கிராமத்தை உதவும் கரங்கள் அமைப்பு தத்தெடுத்து, இங்குள்ள மீனவர்களுக்காக வீடு கட்டித் தரும்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வீடுகள்கட்டப்பட்டன.

மொத்தம் 72 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதையடுத்து இதன் திறப்பு விழா நடைபெற்றது. நடிகர் சிவக்குமார்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வீடுகளைத் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்யாதவ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெ>விக்கப்பட்டுள்ளது.

உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனரான வித்யாகர் கூறுகையில், உதவும் கரங்கள் மூலம் திரட்டப்பட்டநிதியைக் கொண்டு இந்த மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள்செயல்படுத்தப்படவுள்ளன.

உதவும் கரங்கள் அமைப்பு 2000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறார்கள் மற்றும் முதியவர்களுக்குஅடைக்கலம் தந்துள்ளது.

இந்த மையத்தில் சிகிச்சை, பாதுகாப்பு, மறு சீரமைப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து சேவைகளும்செய்யப்படுகின்றன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+