நடந்தது மதிமுக கூட்டம்-கதறி அழுத வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:அவைத் தலைவரான எல்.கணேசனின் தடையையும் மீறி சென்னை மதிமுக தலைமையகமான தாயகத்தில்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று மதிமுக அரசியல் குழுக்களின் கூட்டத்தைக் கூட்டினார்.

கூட்டத்திற்கு வைகோவே தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,உயர்நிலை குழு உறுப்பினர்கள், தலைமை கழக செயலர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆட்சி மன்ற உறுப்பினர்கள்உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு வருகை தந்த வைகோவுக்கு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானதொண்டர்களும், கட்சிப் பிரமுகர்களும் மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் தாயகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.அதன் பின்னர் தொண்டர்கள் வைத்திருந்த பெரிய கேக்கை வெட்டி கிருஸ்துமஸையும்கொண்டாடினார்.

பின்னர் அண்ணா சிலை முன்பு நின்றபடி தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தத்தொடங்கினார் வைகோ. மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு வைகோ பேனார். அவர்கூறியதாவது:

மதிமுகவை உருவாக்க எத்தனையோ கஷ்டங்களை சந்தித்தோம். 5 உயிர்களைஇழந்தோம். இந்த தாயகம் (கட்சி அலுவலகம்) சாதாரணமாக கட்டப்பட்டது அல்ல.ஜோசப் என்பவர் இயேசு நாதர் பிறந்த ஊரான பெத்லேகம் சென்று அங்கிருந்து புனிதநீரை எடுத்து வந்து இங்கே தெளித்து, வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது இந்ததாயகம்.

மதிமுக ஆரம்பித்து 13 வருடங்களாக நாம் எந்த வன்முறையிலும் ஈடுபடாமல்,யாருக்கும் தீங்கு செய்யாமல் கட்சி நடத்தி வருகிறோம். கலவரம் நிற்க வேண்டும்,சாந்தி தழைக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

கொலைகார பழி சுமத்தி வெளியேற்றினார்கள். பலர் மடிந்தனர். பொட்டல் காட்டில்நின்று கட்சியை வளர்த்தோம். வீதி வீதியாக பணம் திரட்டி கட்டடம் கட்டினோம்.இதற்காக நாம் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த தாயகம்தான் எனக்குகோவில், மசூதி, தேவலாயம் எல்லாம்.

ஏழை விவசாயி மனைவி, மக்களுடன் மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பி ஓலைகள்கட்டி குடிசை செய்து உள்ளே குடியேறுகிறான். அந்த விவசாயிக்குத்தான் கூரைவீட்டின் அருமை தெரியும். அவர்களைப் போலத்தான் தாயகத்தைக் கட்டினோம்.

1994ம் ஆண்டு ஜனவ> 15ம் தேதி இந்த அலுவலகத்தைத் திறந்தபோது, என்ன பெயர்வைக்கலாம் என யோசித்தோம். அண்ணாவின் தாயகம் தான் நினைவுக்கு வந்தது.அந்தப் பெயரை சூட்டினோம். இது எல்லோரும் கூடும் தாயகம். நம் அனைவருக்கும்இது வீடு.

இப்படி வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை நிர்மூலம் செய்ய திட்டம்வகுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் யாரும் ஆத்திரப்படக் கூடாது. அமைதி காக்கவேண்டும். சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். நாம் துயரப்படுகிறவர்கள்,பாக்கியவான்கள்.

நமது கட்சிதான் தமிழ்நாட்டுக்குத் தேவையான கட்சி. நல்ல கட்சி. ஜெயிக்கலாம்,ஜெயிக்காமல் போகலாம், ஓட்டு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால்தமிழ்நாட்டுக்கு நல்ல கட்சி நமது கட்சிதான்.

தற்பாது மதிமுகைவ அழிக்க சதித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதிமுககூட்டணியிலிருந்து நம்மை வெளியேற்றுவது முதல் திட்டம். கலவரம் செய்துநாங்கள்தான் உண்மையான மதிமுக என்று அறிவிக்கச் செய்வது இரண்டாவது திட்டம்.

சதித் திட்டம் எங்கே வகுக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். கடந்த மாதம் 27ம்தேதி இரவு இரவு 10.30 மணிக்கு சிஐடி நகர் வீட்டில் முதல்வர் கருணாநிதியைஇருவரும் (எல்.ஜி, செஞ்சி) சந்தித்துப் பேசியுள்ளனர். 2 மணி நேரம் ஆலோசனைநடத்தியுள்ளனர். இன்று காலை கூட செஞ்சி ராமச்சந்திரன் ஒரு மணி நேரம் சந்தித்துப்பேசியுள்ளார்.

200க்கும் மேற்பட்ட கிரிமினல்கள், குண்டர்கள், போக்கிரிகளுடன், தாயகத்துக்குஉள்ளே வர திட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களைத் தடுத்தால் கலவரம்செய்யவும், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் அவர்களுடன் சேர்ந்துதாக்குதல் நடத்த, குறிப்பாக என்னைத் தாக்கத் தயாராக இருப்பதாக தகவல்வந்துள்ளது.

உள்ளே நுழையும்போது நீங்கள் தடுத்தால் கைகலப்பில் ஈடுபடுவார்கள். அதன் பிறகுமாநகராட்சி தேர்தலில் நடந்தது போல வன்முறைகள் நிகழும். எனவே எந்தக்கட்டத்திலும் ஆத்திரப்படாதீர்கள்.

சிறையிலிருந்து வெளிவர உதவும்படி நான் மன்றாடியதாக பழி சொல்லப்பட்டுள்ளது.நான் ஜெயிலில் இருந்து வெளி வர விரும்பாமல்தான் உள்ளே இருந்தேன். யாரிடமும்மன்றாடவில்லை. இன்னும் என் மீது வழக்கு உள்ளது.

தேர்தலில் ஆதரவு வேண்டும் என்று கேட்டவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.நான் போய் கண்ணீர் விட்டுக் கதறி அழுதேனாம். திமுகவுக்கு ஆபத்து வந்தகாலங்களில் கூட கட்சியைக் காக்க போராடியவன்.

திமுக தொண்டர்களுக்கும் எங்களுக்குபம் பகை இல்லை. நீங்கள் குறுக்கேவராதீர்கள். ரவுடிகள் வரட்டும், போலீஸ் வரட்டும். அறவழியில் எதிர்ப்போம்.என்னையும் தாக்க திட்டமிட்டுள்ளனர். தாயகத்தைப் பூட்டி விட வேண்டும். இந்தக்கட்சி இருக்கக் கூடாது. அலுவலகம் இயங்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அநீதி நடந்தால் பொட்டல் காட்டில் நின்று கூட கட்சியை நடத்துவேன்.என் உடம்பில் உயிர் இருக்கும் வரை கட்சியை வளர்ப்பேன். எனக்குப் பிறகுலட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள், எதற்கும் அஞ்ச மாட்டோம் (இதைக்கூறும்போது வைகோ கண்ணீர் விட்டு அழுதார், அப்போது கருணாநிதிக்கு எதிராககோஷமிட்டனர் தொண்டர்கள்).

கலவரம் செய்து தாயகத்தைப் பூட்டி விடலாம். ஆனால் நாங்கள் வாழும் தமிழகமக்களின் இதயங்களைப் பூட்ட முடியாது என்று ஆவேசமாக பேசினார் வைகோ.

பின்னர் நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினார்.இக்கூட்டத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்டச் செயலாளர்களில் திருவாரூர்செயலாளர் தியாகபாரி (எல்.ஜி ஆதரவாளர்) வரவில்லை. கோவை புறநகர் மாவட்டசெயலாளர் மாரியப்பன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதால் வரவில்லை. நீலகிரி செயலாளர் அமெ>க்கா போய்விட்டதால் அவரும் வரவில்லை.

இந்த இரு செயலாளர்களும் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம்கொடுத்துள்ளனர். மற்ற 33 மாவட்டச் செயலாளர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பொருளாளர் கண்ணப்பன், கலைப்புலி தாணு, எம்.எல்.ஏக்கள் கம்பம்ராமகிருஷ்ணன், வீர இளவரசன், ஞானதாஸ், டாக்டர் சதன் திருமலைக்குமார்,வரதராஜன் ஆகியோரும் வந்திருந்தனர்.

கூட்டத்தில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக இந்தக் கூட்டத்தைத் தடுக்க எல்.ஜி-செஞ்சி ராமச்சந்திரன் தரப்பினர் திமுகவின் உதவியோடுரெளடிகளை களமிறக்கிவிட்டுள்ளதாகவும் தொண்டர்கள் என்ற போர்வையில் ரெளடிகள்வந்திறங்கியிருப்பதாகவும் இவர்களால் பெரும் கலவரம் நடக்க இருப்பதாகவும் வைகோ தரப்பு புகார் கூறியது.

எல்.ஜி, செஞ்சி ராமச்சந்திரனை அவைத் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கிவைகோ எடுத்த நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துவிட்டதால், அவர்களால் இன்று வைகோ நடத்தியகூட்டத்தில் சட்டப்படி கலந்து கொள்ள முடியும்.

இதனால் அவர்கள் கூட்டத்துக்கு வந்தால் பெரும் கலாட்டா நடப்பது உறுதி என்ற சூழல் நிலவியது. ஆனால்,வைகோ கூட்டிய கூட்டத்துக்கு தடை விதித்துவிட்ட எல்.கணேசன் அதை வரும் 29ம் தேதி சேலத்தில்கூட்டியுள்ளார். இதனால் இருவரும் கூட்டத்துக்கு வரவில்லை.

அதே நேரத்தில் கூட்ட அரங்கத்திற்குள், தங்கள் ஆதரவாளர்களை நுழைய விட்டுவைகோவுக்கு எதிராக குரல் எழுப்பவும், வன்முறை ஏற்படுத்தவும் இருவரும்முயலலாம் என வைகோ தரப்பு கூறியது.

இந்த கலவரத்தை காரணம் காட்டி மதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கபோலீஸ் உதவியோடு திமுக முயலும் எனவும் வைகோ தரப்பினர் அஞ்சினர்.ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

இதனால், இன்றைய கூட்டத்திற்கு போலீசை நம்பாமல் தனது தொண்டரணியின்சார்பில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்திருந்தார் வைகோ. கூட்டம் நடக்கும்அரங்குக்குள் தொண்டர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கட்சியின் அனைத்துக்குழுக்களையும் சேர்ந்த 1,250 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாளஅட்டை இல்லாதவர்கள் எவ்வளவு முக்கியஸ்தராக இருந்தாலும் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை. மேலும், கூட்டத்தில் ரசபாசம் நடக்கலாம் என்பதால்பத்திரிகையாளர்களை தப்பித் தவறி கூட அனுமதித்துவிட வேண்டாம் என வைகோஉத்தரவிட்டிருந்தார். போட்டோகிராபர்கள் மட்டும சில நிமிடங்கள் உள்ளேஅனுமதிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் தாயகத்தில் இரவு-பகலாக வைகோவின் தொண்டரணியினர்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் கட்சி நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்ள வைகோ ஏகப்பட்டபணத்தை செலவிட்டு வருவதாக எல்.ஜி. தரப்பு கூறுகிறது. மாவட்டச்செயலாளர்களுக்கும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுக்கும் மதிமுக தலைமையிடம்இருந்து பணம் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கட்சி நடத்த பணமில்லை என்று வழக்கமாக புலம்பும் வைகோ இப்போது பணத்தைவாரி இறைப்பது எப்படி என்று தெரியவில்லை என்கின்றனர் எல்.ஜி. ஆதரவாளர்கள்.வைகோவுக்கு நெருக்கமான தோட்டத்தில் இருந்து பணம் வந்திருக்கலாம்என்கின்றனர்.

முன்னதாக கலவர சூழல் நிலவியதால் தாயகத்துக்கு வெளியே போலீசார்குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் கட்சி அலுவலகம்அமைந்துள்ள எழும்பூர் லட்சுமிபதி-ருக்மணி சாலையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+