3வது அணி வரவே வராது: வெங்கையா
சென்னை:தேசிய அளவில் 3வது அணி வரவே வராது. அதற்கான வாய்ப்பே இல்லை என்றுபாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய அளவில்தற்போதைக்கு பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக எந்த அணியும் இல்லை. இந்தஅணிகளுக்கு மாற்றாக 3வது அணியை அமைக்க வேண்டும் என பலரும் கனவுகாண்கின்றனர். ஆனால் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பே இல்லை.
3வது அணி அமைக்க நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதை நாடு பார்த்து அலுத்துவிட்டது. ஆனால் தேசிய அளவில் 3வது அணி அமைக்கப்பட்டால் ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக கவிழ்ந்து விடும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளன. ஆனால்அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசுகுறைக்கவில்லை என்றார் வெங்கையா நாயுடு.
தேசிய அளவில் மூன்றாவது அணி விரைவில் உருவாகும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications