வேலை-இந்தியாவுக்குத் திரும்பும் என்ஆர்ஐகள்
லண்டன்:இந்தியாவில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையைத் தேடி ஏராளமான வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பி வருவதாக ஆய்வு ஒன்றில் உறுதியாகியுள்ளது.
ஒரு காலத்தில் படிப்பை முடித்தவுடன் வெளிநாட்டுக்குப் போய் வேலை தேடுவதுஎன்பது ஃபேஷனாகவே இருந்தது. அதிலும் ஐஐடிகளில் படித்தவர்கள் நேராககேம்பசிலேயே வெளிநாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டு பொட்டியைக்கட்டுவது வழக்கமாக இருந்தது.
அடுத்ததாக சாப்ட்வேர் படிப்புகளை முடித்தவர்கள், இந்தியாவில் வேலைக்குச் சேர்ந்தகையோடு அமெரிக்கா பக்கம் கிளம்பிப் போய் விடுவது வாடிக்கையாக இருந்தது.
இப்போது அந்த மோகம் குறைய ஆரம்பித்துள்ளது. காரணம், இந்தியாவிலேயேவெளிநாடுகளுக்கு இணையான சம்பளம் கிடைக்க ஆரம்பித்திருப்பதும், நல்லவேலையும், திறமைக்கு மரியாதையும் கிடைக்க ஆரம்பித்திருப்பதும் தான்.
மேலும் வெளிநாடுகளுக்கு இணையாக வாழ்க்கைத் தரமும் மெல்ல மெல்ல உயர்ந்துவருவதும் முக்கிய காரணம்.
இங்கிலாந்திலிருந்து மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 32,000 பேர் அந்த ஊர்வேலைகளை விட்டு விட்டு இந்தியா திரும்பியுள்ளனராம். இந்தியாவில் ஏற்பட்டுள்ளபொருளாதார வளர்ச்சிதான் இந்த பின்னோக்கிய பொருளாதார மாற்றத்திற்குக்காரணம் என்கிறது அந்த ஆய்வு.
வெளிநாடுகளில் இருப்பதைப் போல இந்தியாவிலும் அருமையான வாழிடமுமமுக்கியமாக நமது பாரம்பரிய வாழ்க்கையை வாழ முடியும் என்பதுதான் இந்தவெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களைக் கவரும் அம்சமாக உள்ளது.
இந்தியா திரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் டெல்லி, புனே, பெங்களூர், மும்பைபோன்ற இடங்களில் குடியேறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications