சென்னையில் சிறுவன் கடத்திக் கொலை: 5 லட்சம் கேட்டு மிரட்டியது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மேலாளரின் மகன் கடத்தப்பட்டான். அவனைவிடுவிக்க ரூ. 5 லட்சம் கேட்டு சில மர்ம நபர்கள் மிரட்டினர். இதையடுத்து பெற்றோர் போலீசுக்கு தகவல்தந்ததால் அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டான்.

Arvindhசாலிகிராமம் லோகையா காலனி 2வது மெயின் ரோட்டில் மருதம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர்கார்த்திகேயன். அப்பல்லோ மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதா.இவர்களது ஒரே மகன் அரவிந்த் (வயது 11). ஏவிஎம் மெட்ரிகுலேசன் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

அரவிந்த் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை தனது அடுக்குமாடிவீட்டு குடியிருப்பு வளாகத்திற்குள் அரவிந்த் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

இரவு 8 மணியாகியும் அரவிந்த் வீட்டுக்கு வரவில்லை என்பதால் அவனது பெற்றோர் மேல் மாடியிலிருந்து கீழேவந்து பார்த்தனர். ஆனால் அரவிந்த் அங்கு இல்லை. இதையடுத்து அவனை பல இடங்களிலும் தேடினர். ஆனால்அவன் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதட்டமடைந்தனர்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் இரவு 9.30 மணிக்குகார்த்திகேயன் வீட்டுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், அரவிந்தை நாங்கள்தான் கடத்திவைத்துள்ளோம். அவனை விடுவிக்க வேண்டுமானால், ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும். அப்படிகொடுக்காவிட்டால் அரவிந்த்தை உயிரோடு பார்க்க முடியாது, மறந்து விடுங்கள் என்று கூறியுள்ளான்.

அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதையடுத்து கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டின் நேரடி கண்காணிப்பில் அரவிந்த்தை மீட்க தனிப்படைஅமைக்கப்பட்டது. இணை ஆணையர் துரைராஜ் மேற்பார்வையில் துணை ஆணையர் பாஸ்கர், உதவி ஆணையர்சேது ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணையில் இறங்கியது.

கடத்திய நபர் சாலிகிராமம் பகுதியிலிருந்துதான் போனில் பேசியிருக்கிறான் என்று தெரியவந்தது. இதையடுத்துசாலிகிராமம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள்,டாக்சி டிரைவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கடத்தல் நபர் நேற்று இரவு பேசியதோடு சரி, அதன் பின்னர் பேசவில்லை. இதனால் அரவிந்த் கதி என்ன ஆனதுஎன்பது தெரியாமல் அவனது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.

கார்த்திகேயன் குடும்பத்தை நன்கு அறிந்த யாரோ சிலர்தான் அரவிந்த்தை கடத்தியிருக்க முடியும் எனபோலீஸார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில், கார்த்திகேயனின் உறவினர்கள், நண்பர்கள்ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இந் நிலையில் விருகம்பாக்கம் சத்யமூர்த்தி நகர் அருகே ஒரு புதருக்குள் சிறுவனின் உடல் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர்.

இறந்து கிடந்தது அரவிந்த் தான் என அவனது பெற்றோர் அடையாளம் காட்டினர். அவனது உடல் பிரேதப்பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச் சம்பவத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சமீபத்தில் சென்னையில் குடும்பச் சண்டை காரணமாக ஒரு சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுநினைவுகூறத்தக்கது. இப்போது மீண்டும் ஒரு கடத்தல், கொலை அரங்கேறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+