நேபாள மன்னருக்கு சோதனை மேல் சோதனை!
காத்மாண்டு:நேபாள மன்னர் ஞானேந்திரா குடும்பத்துடன் சுற்றுலா போவதற்கு அந்நாட்டு பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாதடை போட்டு விட்டார்.
நேபாளத்தில் மன்னராட்சி அகற்றப்பட்டு அங்கு அனைத்துக் கட்சிக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.மன்னருக்கு இருந்து வந்த அத்தனை அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விட்டன.
தற்போது நாட்டின் உயரிய தலைவராக, அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக பிரதமர் கொய்ராலாவிளங்குகிறார். வெறும் அலங்காரப் பொம்மையாக மன்னர் பதவி மாற்றப்பட்டு விட்டது.
இதனால் அரண்மனைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் ஞானேந்திரா. இந்த நிலையில் மன்னர் ஞானேந்திராதனது குடும்பத்துடன் ஹெடாடி என்ற இடத்துக்கு சுற்றுலா செல்ல விரும்பினார். அங்கு இன்னும்ஞானேந்திராவுக்கு கொஞ்சம் போல ஆதரவு உள்ளது.
ஹெடாடிக்கு சுற்றுலா செல்வது குறித்து பிரதமர் கொய்ராலாவுடன் அவர் பேசியுள்ளார். அப்போது ஹெடாடிக்குப்போக வேண்டாம் என கொய்ராலா தடை போட்டு விட்டாராம்.
இதுகுறித்து கொய்ராலா கூறுகையில், ஹொடாடிக்கு சுற்றுலா போவது குறித்து ஞானேந்திரா என்னிடம்ஆலோசனை கேட்டார். அப்பகுதி மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரான கமால் தாபாவின் சொந்த ஊர் என்பதால்உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறி போக வேண்டாம் என கூறி விட்டேன்.
ஹெடாடிக்குப் போனால் மன்ன>ன் ஆதரவாளர்களுக்கும், கமால் தாப்பாவின் தொண்டர்களுக்கும் இடையேமோதல் மூளலாம். எனவேதான் மன்னருக்குத் தடை போட்டு விட்டேன் என்றார் கொய்ராலா.
இதனால் சுற்றுலாவுக்குக் கூட போக முடியாமல் நொந்து நூடூல்ஸாகி அரண்மனையிலேயே தங்கியிருக்கிறார்ஞானேந்திரா.
என்னடா இது.. மன்னருக்கு வந்த சோதனை!












Click it and Unblock the Notifications