உபி ஆசிரியை கொலை-சிக்கலில் 3வது அமைச்சர்
லக்னெள:மீரட் ஆசிரியை கவிதா ராணி செளத்ரி கொலை வழக்கில் உ.பி. மாநில அமைச்சர்கள் இருவர் ராஜினாமாசெய்துள்ள நிலையில், தொடக்கக் கல்வி அமைச்சர் கிரண் பால் சிங்கின் பெயரும் தற்போது அடிபடுகிறது.
உ.பி. மாநிலம் மீரட்டில் உள்ள செளத்ரி சரண்சிங் பல்கலைக்கழக பேராசிரியை கவிதா ராணி செளத்ரியை கடந்தஅக்டோபர் 24ம் தேதி முதல் காணவில்லை. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ரவீந்திரபிரதான் என்பவர் போலீஸ் வசம் சிக்கினார்.
அவ>டம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. கவிதா பல உ.பி. மாநிலஅமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார் என்றும், அதை ஆபாச கோலத்தில்பிரதானை வைத்து படம் பிடித்தார் என்றும், பின்னர் அந்த வீடியோவைக் காட்டி அமைச்சர்களிடம் பணம் பறித்துவந்ததும் தெரியவந்தது.
அமைச்சர் மிராஜூதீன் அகமதுடன் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அவரைமிரட்டி ரூ. 35 லட்சம் பணத்தைப் பறித்துள்ளனர். இந்தப் பணத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் கவிதாவை,தனது நண்பர் யோகேஷுடன் சேர்ந்து கொலை செய்தார் பிரதான்.
கவிதாவின் பிணத்தை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சர்ச்சையில் சிக்கிய மிராஜூதீன் அகமதுதிங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். செவ்வாய்க்கிழமை இன்னொரு அமைச்சரான பாபுலாலும்தனது பதவியிலிருந்து விலகினார். இவர் கவிதா கொல்லப்படுவதற்கு முன்பு 8 நாட்களில் 57 முறை செல்போன்மூலம் கவிதாவுடன் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தொடக்கக் கல்வி அமைச்சர் கிரண் பால் சிங்கின் பெயரும் கவிதா விவகாரத்தில் அடிபடுகிறது.இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் முலாயம்சிங் யாதவை அவர் சந்தித்து தனது முடிவை தெரிவித்தார்.
ஆனால் அவரது ராஜினாமா முடிவை ஏற்க முலாயம் சிங் மறுத்து விட்டார். இதுகுறித்து பின்னர் புலந்த்சகரில்செய்தியாளர்களிடம் கிரண் பால் சிங் கூறுகையில், நிலைமையை தைரியமாக சந்திக்கும்படி முதல்வர் என்னைவலியுறுத்தினார்.
நானோ அல்லது எனது குடும்பத்தினரோ இந்த வழக்கில் எள்ளளவும் சம்பந்தப்படவில்லை. எனது புகழைக்குலைப்பதற்காக சில அரசியல் எதி>களால் புனையப்பட்ட சதித் திட்டம் இது. அடுத்த ஆண்டு சட்டசபைத்தேர்தலில் நான் வெற்றி பெறக் கூடாது என்று நினைத்து எனது பெயரைக் கெடுக்க நடக்கும் முயற்சி இது.
இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் அந்த விசாரணையை நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
எனது தொகுதியான அகோடாவில் டிசம்பர் 31ம் தேதி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளேன். அப்போதுஇந்த விவகாரம் குறித்து எனது தொகுதி மக்களிடம் விளக்கவுள்ளேன். அவர்கள் என்னை ராஜினாமா செய்யஉத்தரவிட்டால் உடனடியாக கடிதத்தைக் கொடுத்து விடுவேன் என்றார் கிரண் பால் சிங்.
கவிதா ராணி செளத்ரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அமைச்சர்கள் சிக்கி வருவது முலாயம் சிங் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இதனால் இந்த வழக்கை சிபிஐயிடம் தர மறுத்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications