மன்மோகன் சிங்குடன் வைகோ சந்திப்பு!
டெல்லி:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துமதிமுகவை உடைக்க திமுக முயலுவதாக புகார் கூறினார்.
வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள எல்.கணேசனும், செஞ்சிராமச்சந்திரனும் நாளை சேலத்தில் போட்டி பொதுக் குழுவைக் கூட்டியுள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக செய்து வருவதாககூறப்படுகிறது. திமுகவினரை பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற போர்வையில் கூட்டி,வைகோவை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வர எல்.ஜி. தரப்பு முடிவுசெய்துள்ளதாக மதிமுக தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
மேலும், சமீபத்தில் சென்னை மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடந்த உயர் நிலைக்குழுக் கூட்டத்திலும் பெரும் கலவரத்தை ஏற்படுத்த முதல்வர் கருணாநிதிதலைமையில் சதி ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக வைகோ குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.சோனியாதான் தனது அலுவலகத்தை வன்முறைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றினார்என்றும் அவர் கூறியிருந்தார். இந் நிலையில் வைகோ திடீரென டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடன் அதிமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான ஜோதியும்சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் வைகோவை முற்றுகையிட்ட செய்தியாளர்கள்டெல்லி பயணம் குறித்து கேட்டபோது, போய்விட்டு வந்து பேசுகிறேன் என்றுசொல்லிவிட்டுப் போனார்.
இந் நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப்பேசினார். சுமார் அரை மணி நேரம் இச் சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது மதிமுகஎம்.பி. பொள்ளாச்சி கிருஷ்ணனும் உடன் இருந்தார்.
சந்திப்புக்குப் பின்னர் வைகோ வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அவரிடம்என்ன பேசினீர்கள் என்று கேட்டதற்கு, இப்போது எதுவும் சொல்வதற்கில்லைஎன்றார்.
மம்தாவை சந்திக்க கொல்கத்தா பயணம்:
இதையடுத்து வைகோ கொல்கத்தா கிளம்பிச் சென்றார். டாடா நிறுனத்துக்கு நிலம்ஒதுக்குவதை எதிர்த்து 28 நாட்களாக உண்ணாவிரதம் நடத்தி வரும் திரிணமூல்காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறுவைகோ கோரவுள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுக் குழு:
இதற்கிடையே வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிமுகவின் 16வது பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜனவரி 10ம் தேதி சென்னைஅண்ணா நகர் , மூன்றாவது அவென்யூ, நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீமகாலில் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்தக் கூட்டம் கோவையில் நடப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அதை திடீரென சென்னைக்குமாற்றியுள்ளார் வைகோ.
வைகோ பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு:
இந் நிலையில் வைகோ கூட்டியுள்ள பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி எல்ஜியும் செஞ்சியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.
மதிமுக விதிப்படி அவைத் தலைவரான எல்ஜி தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். ஆனால், எங்களை சட்ட விரோதமாக நீக்கிவிட்டு கூட்டத்தைவைகோ கூட்டியுள்ளார். எனவே அந்தக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications