வைகோ கட்சியை விட்டு நீக்கம்!: புதியபொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன்!!

Subscribe to Oneindia Tamil

சேலம்:மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்பொறுப்பிலிருந்தும் வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுகபொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராகசெஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் எல்.கணேசன்-செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலைகூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது.ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும்காத்திருந்தனர்.

இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களேஅதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாகவந்தவர்களை போலீஸார் சோதனை நடத்திய பின்னர் உள்ளே அனுமதித்தனர்.

மொத்தமுள்ள பொதுக் குழு உறுப்பினர்கள் சுமார் 1,000 பேரில் இன்றைய போட்டி மதிமுக கூட்டத்தில் 600 பேர்கலந்து கொண்டதாக எல்.கணேசன் கூறினார். ஆனால், 200 பேர் தான் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் வைகோவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும்தீர்மானமும் கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்தத்தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக எல்.கணேசன் அறிவித்தார்.

மேலும், புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரனை நியமித்தும் ஒருதீர்மானம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன்கூட்டணி வைப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனதுசுயநலத்துக்காக ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டணிஅமைத்ததாகவும் ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கல்யாண மண்டபம் உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதைத் தடுக்கசீருடையிலும், மாறு வேடத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டள்ளனர்.

கூட்டத்துக்கு எல்.கணேசன் தலைமை தாங்குகிறார். செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலைவகிக்கிறார்.

கூட்டம் நடக்கும் கல்யாண மண்டபப் பகுதியிலும் ஐந்து ரோடு, நாலு ரோடு உள்ளிட்டபல இடங்களிலும் மதிமுக கொடிகள், கட் அவுட்கள்,தோரணங்கள்கட்டப்பட்டுள்ளன.

பொதுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மாலை அம்மாப்பேட்டை காந்திமைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இதற்கிடையே, சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கட்சிநிர்வாகிகள் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் சேலத்தை விட்டு வெளியேறி(வெளியேற்றப்பட்டு?) விட்டனர். இதனால் அவர்களில் ஒருவர் கூட எல்.ஜிகூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக சேலம் வந்த எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் செய்தியாளர்களிடம்பேசுகையில், பொதுக்குழுக் கூட்டத்தில், 500 முதல் 600, 700 உறுப்பினர்கள் வரைகலந்து கொள்வார்கள். பொதுக்குழுக் கூட்டத்தில், 13 ஆண்டு கால மதிமுக தேர்தல்கூட்டணி, அரசியல் பணிகள், திராவிடர் கொள்கையிலிருந்து வைகோ வழி தவறியதுகுறித்துப் பேசவுள்ளோம் என்றனர்.

கூட்டத்தில் வைகோவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானமும் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.

எல்ஜி நடத்தும் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்வழக்குப் போடுவோம், சிறையில் தள்ளுவோம் என காவல்துறை மூலம் மதிமுகபொதுக் குழு உறுப்பினர்களை திமுக மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைக்கண்ணன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோ பக்கமே உள்ளனர். இதில் ஒருவர் கூட போட்டி எல்.ஜி. கூட்டிய பொதுக்குழுவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது ஆட்களை மதிமுகவினர் என்று கூறி போட்டி பொதுக்குழுவிற்கு ஆட்களை அனுப்பியுள்ளார். இது பொதுகுழுக் கூட்டமும் அல்ல, அதில் எடுக்கும் எந்த முடிவும் வைகோவைகட்டுப்படுத்தப் போவதும் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+