கொலையாளிகளை காட்டிக் கொடுத்த காயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரவிந்த் கொலையில் கொலையாளிகளை காட்டிக் கொடுத்தது ஒருவனின் கையில் இருந்த காயம் தான் என்றுதெரியவந்துள்ளது.

இது குறித்து கமிஷ்னர் லத்திகா சரண் கூறியதாவது:

அரவிந்துடன் விளையாடி அருள், உமா ஆகியோரிடம் விசாரித்தபோது, அரவிந்த் கார் பக்கமாக சென்றுஒளிந்ததாகக் கூறினார்கள். அப்போது யார் அங்கே இருந்தார்கள் என்று கேட்டபோது கோகுல், ஸ்ரீராம்ஆகியோர் கார் அருகே இருந்ததாகக் கூறினர்.

அது தான் எங்களுக்குக் கிடைத்த முதல் க்ளு. இந்த இருவரும் அரவிந்தை ஏமாற்றி பிரவீன் வீட்டுக்கு கொண்டுசென்றுள்ளனர். அரவிந்த் சிறிது நேரத்தில் வெளியே செல்ல முயன்றுள்ளான்.திஆனால், அவன் மறுக்கவே அவனை அடித்தும் கழுத்தை பிடித்தும் நெறித்தும் தாக்கியதில் அவன்மயங்கிவிட்டான்.

இடையில் அரவிந்தின் அம்மாவுக்கு பணம் கேட்டு போன் செய்த இவர்கள் மீண்டும் பிரவீன் வீட்டுக்குள்போனபோது அரவிந்த் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளான். இதையடுத்து அவன் வாயில் துணியை வைத்துஅமுக்கி, அவன் மீது ஏறி உட்கார்ந்து ஹாலோ பிளாக் செங்கல்லால் தலையிலும் முகத்திலும் அடித்துள்ளனர்.இதில் அவன் இறந்துவிட்டான்.

இதையடுத்து உடலை முட்புதறில் கொண்டு வந்து போட்டுவிட்டு, போலீஸ் மோப்ப நாய் வந்தால் திசை திருப்பமிளகாய் பொடியை தூவியுள்ளனர். கில்லி படத்தின் மூலம் இந்த டெக்னிக்கை அவர்கள் கற்றார்களாம். (அதில்விஜய் மிளகாய் பொடியை தூவி நாய்களை திசை திருப்புவார்)

மீண்டும் பிரவீண் வீட்டுக்கு வந்து ரத்தக் கறையை எல்லாம் கழுவிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

ஆனால் அருள், உமா ஆகியோர் தந்த தகவலை வைத்து இந்த மாணவர்களை போலீசார் விசாரிக்கஆரம்பித்தனர். அப்போது ஒருவன் கையில் காயம் இருந்தது. இது என்ன காயம் என்று கேட்டபோது பிரவீன்வீட்டு நாய் கடித்துவிட்டதாகக் கூறினர்.

இதையடுத்து பிரவீன் வீட்டுக்கு போலீசார் போய் பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் ரத்த வாடை வீசியது.மேலும் சில தடயங்களும் சிக்கின. இதை வைத்தும் அங்கிருந்த கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதிலும் இந்தமூன்று பேரும் தான் கொலையை செய்து உறுதியானது.இதை பின்னர் அவர்களே கொலையை ஒப்புக் கொண்டு, எப்படி கொலை செய்தோம் என்பதையும் விளக்கினர்என்றார் லத்திகா சரண்.

கொலையாளிகள் பெற்றோர் மாயம்:

இந் நிலையில் ஸ்ரீராம், சுதன் ஆகியோரின் பெற்றோரும் குடும்பத்தினரும் அவமானம் கருதிதலைமறைவாகிவிட்டனர். அவர்களது வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.

முக்கிய குற்றவாளியான கோகுலின் பெற்றோர் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களிடம் போலீசார்விசாரித்தபோது, கோகுல் இப்படி செய்திருக்க மாட்டான். ஆனால் அப்படிச் செய்திருந்தால் தண்டனையைஅனுபவிக்கட்டும் என அழுதபடி கூறினர்.

கொலையாளிகள் படம் வெளியிடப்படாது?:

கொலையாளிகள் மூவருமே மைனர்கள் என்பதால் சட்டப்படி அவர்களது படத்தை போலீசார் வெளியிடமுடியாது. மேலும் கைதான அந்த மூவரையும் நிருபர்களிடமும் போலீசார் காட்டவில்லை.

இந்தக் கொலையை துப்பு துலக்கியது இன்ஸ்பெக்டர் ஐயப்பன், எஸ்.ஐகள் சந்துரு, கோவிந்தராஜ், சந்துருதலைமையிலான கிரைம் பிரிவு போலீசார் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+